முரசொலி தலையங்கம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை ஒருமுறை சென்றாவது பார்த்தாரா எடப்பாடி? - முரசொலி தலையங்கம்!

குடியுரிமை மசோதாவை எதிர்த்து வாக்களித்து நமது ஜனநாயக கடமையை அச்சமின்றி நிறைவேற்றியிருக்கிறோம் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேசிய குடியுரிமை பதிவேட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தும் எதிர்த்து வாக்களித்தும் நமது ஜனநாயக கடமையை அச்சமின்றி நிறைவேற்றியிருக்கிறோம். இதுதான் நமது அரசியல் இயல்பு. எந்த பிரச்னையை யார் தொட்டுப் பேசினாலும், தனித்த குரலாக இல்லாமல் தமிழ்நாட்டின் குரலாகவே நாடாளுமன்றத்தில் கேட்டது.

அதேபோல், அதன் ஒரு புள்ளியாக நாடாளுமன்ற தி.மு.க குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு செம்மொழி நிறுவனத்தின் சீரழிவை சுட்டிக் காட்டினார். கலைஞர் நிறுவிய விருது என்னவாயிற்று? இதுவரை ஒருவருக்குதானே வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழைப் பற்றியும், வள்ளுவரைப் பற்றியும் பேசுகிறீர்கள். திருவள்ளுவரைக் காவியாக்குகிறீர்கள். இவற்றையெல்லாம் அரசு தனது நடவடிக்கையின் மூலம் சரி செய்யவேண்டும் என்றார்.

மேலும் கலைஞர் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை உருவாக்கினார். யார் முதல்வராக இருக்கிறார்களோ அவர்களே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் இருக்கும் முதல்வர் எடப்பாடி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் ஒருமுறை சென்றாவது பார்த்தது உண்டா? என முரசொலி நாளேட்டின் தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

banner