முரசொலி தலையங்கம்

உலக தமிழாராய்ச்சி நிறுவனமா? இந்தி பிரச்சார சபையா? - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியின் மேன்மையை அறிவதற்கும், அதன் சிறப்புகளை பிறமொழியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிறநாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் பொருட்டு, சிறப்பான ஆசிரியர்களை கொண்டு மொழிப்பெயர்ச்சி வழங்குவதாக அறிவித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூ.6 லட்சம் நிதி ஒதுகீடு செய்யப்பட்டிருந்தது.

அதனையடுத்து, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த டிச.2ம் தேதி நடந்த விழாவில், பிரெஞ்சு, இந்தி, வங்கம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தி.மு.க கடும் கண்டனங்களைத் தெரிவித்தது.

இந்தி, சமஸ்கிருதம் போன்ற பிற மொழிகளைக் கற்க பல நிறுவனங்கள் இருக்கும்போது, தமிழக்கு என இருக்கும் நிறவனத்தை பிற மொழிகளைக் கற்பிக்க பயன்படுத்த என்ன அவசியம்? உலக தமிழாராய்ச்சி நிறுவனமா இல்லை இந்திப் பிரச்சார சபையா? என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

banner