முரசொலி தலையங்கம்

அ.தி.மு.க.,வின் புதிய கேன்சர் கட்டி அமைச்சர் மாஃபா - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்திலிருந்து மாறுபட்டவர் என்று சொல்லிக்கொண்டு சிதைக்கும் பாய்சன் கும்பல் ஒன்று அ.தி.மு.க-வுக்குள் ஊடுருவி விட்டது. பா.ஜ.க-விடம் அரசியலுக்காக அண்டிப் பிழைப்பது போய், அதுவாகவே மாறிவிடும் பேராபத்து அ.தி.மு.க-வுக்குள் கேன்சர் கட்டியாக பரவிவிட்டது.

அ.தி.மு.க-வையே கமலாலயத்தின் கழிவறையாக மாற்ற நினைக்கும் ஒரு கும்பல் அ.தி.மு.க-வுக்குள் ஊடுருவி விட்டது. அதுதான் மோடியை டாடி என்கிறது. கீழடிப் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்கிறது. எம்.ஜி.ஆரையே திராவிட இயக்கத்துக்கு சம்பந்தமில்லாதவர் என்கிறது. இதைத்தான் அ.தி.மு.க-வின் அடிவயிற்றில் ‘கேன்சர்’ கட்டி உருவாகிவிட்டது என்கிறது முரசொலி தலையங்கம். மற்றபடி மாஃபியாக்கள் தி.மு.க தொண்டனின் செருப்பில் ஒட்டிய சாணிக்கு சமம்.

banner