முரசொலி தலையங்கம்

முதலமைச்சர் எடப்பாடியின் மர்மப் பயணம்! - முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

புதிய தொழில்கள் இல்லை, இருக்கும் தொழில்களிலும் வளர்ச்சி இல்லை, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை, இதுவரை இருந்த வாய்ப்புகளையும் இழக்கும் சூழல். எந்தத் திட்டமிடுதலும் கனவும் இல்லாதவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , போதாக்குறைக்கு புதிதாக தொழில் தொடங்க வருபவர்களிடம் மொத்தமாய் பறித்து விடுவதில் அமைச்சர் பெருமக்கள் தவறுவதில்லை. தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக வந்த பலரும் பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடியதும் அதிகமாய் நடந்துள்ளது.

என்ன காரணம், என்ன செய்ய வேண்டும் என்ற கலந்துரையாடல்கள், ஆலோசனை கூட்டங்கள் எதுவும் நடத்தாமல் தப்பித்து ஓடுகிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர். அதனால் தான் அவரது பயணம் சந்தேகத்திற்குரியதாக, மர்மம் நிறைந்ததாக பொதுமக்களால் பேசப்படுகிறது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

banner