
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் நடைபெற்ற அரசு விழாவில், 223 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவிலான 577 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 201 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 43,993 பயனாளிகளுக்கு 341 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
=> புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள் :-
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில், 15-வது நிதிக்குழு மான்யம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அயோத்திதாசர் பண்டிதர் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு, நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார துணை மையங்கள், புதிய மற்றும் சீரமைக்கப்பட்ட துணை சுகாதார வளாகங்கள், சீரமைக்கப்பட்ட நூலகங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், புதிய இடுகாடுகள், சுற்றுச்சுவர்கள் மற்றும் நடைபாதைகள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், கதிரடிக்கும் தளங்கள், உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள், ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட குளங்கள், சமுதாயக் கூடங்கள், தார்சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் மோட்டார் வசதிகள், நாடக மேடைகள், பேருந்து நிழற்குடைகள், பொது சேவை மையக் கட்டடங்கள், புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டடங்கள், கழிவறைகள் மற்றும் சமையலறைக் கொட்டகைகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், கலையரங்கங்கள், பொருள் வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடங்கள் மற்றும் கழிவறைகள், மின் மயானம், பேவர் பிளாக் சாலைப் பணிகள், புதிய நெற்களங்கள், பொது விநியோகக் கடைகள், உணவு அருந்தும் கூடங்கள், என மொத்தம் 132 கோடியே 46 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவிலான 555 முடிவுற்றப் பணிகள்;
* நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர், தட்டாவூரணி, பொன்னமராவதி ஆகிய இடங்களில் 4 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடைகள், புதுக்கோட்டை மாநகராட்சியில் திருவப்பூர் மற்றும் இராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், சந்தைப்பேட்டை, சாந்தநாதபுரம், கோவில்பட்டி மற்றும் போஸ் நகர் ஆகிய இடங்களில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் மற்றும் காந்திநகர் தொடக்கப் பள்ளிகளில் 3 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்கள்;
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருமயத்தில் 10 கோடி ரூபாய் செலவில் விரிவான அவசர சிகிச்சை மையக் கட்டடம், வளையபட்டி அரசு மருத்துமனையில் 63 இலட்சம் ரூபாய் செலவில் பிணவறை பிரிவுக் கட்டடம், நார்த்தாமலையில் 60 இலட்சம் ரூபாய் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்;
* பள்ளிக் கல்வித் துறை சார்பில், புனல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 47 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், கல்லாக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களில் 65 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் செலவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்கள்;
* வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், அன்னவாசலில் 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்களுக்கான நிழற்கூடம்;
* எரிசக்தித் துறை சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 32 கோடியே 92 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கூடுதல் பளு மற்றும் குறைந்த மின் அழுத்தத்தினை சீர்செய்திட 212 எண்ணிக்கையிலான மின்மாற்றிகள், பாக்குடி மற்றும் நகரப்பட்டி, புதுக்கோட்டை மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களின் 7 கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் திறன் கூட்டப்பட்ட திறன் மின்மாற்றிகள்;
* வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், ஆலங்குடி திட்டப்பகுதியில் 28 கோடியே 64 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள்;
* மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபாய் செலவில் கோட்ட அளவிலான விழுதுகள் மறுவாழ்வு சேவை மையம்;
என மொத்தம், 223 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவிலான 577 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

=> புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் :-
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மூலதன மான்ய சேமிப்பு நிதி, சிறுபாசன குளம் மேம்பாடு செய்தல், முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ், சாலைகள் வலுப்படுத்துதல், குளங்கள் மேம்படுத்துதல், சிறு விளையாட்டு அரங்கங்கள், சமுதாயக் கூடங்கள் என மொத்தம் 27 கோடியே 66 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 46 பணிகள்;
* எரிசக்தித் துறை சார்பில்,
கொத்தக்கோட்டை, கடியாப்பட்டி, வார்ப்பட்டு, விசலூர், செங்கமேடு, மதகம், குழிபிறை ஆகிய இடங்களில் 47 கோடியே 85 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையங்கள், கீரமங்கலம் மற்றும் வடுகப்பட்டியில் 8 கோடியே 10 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையங்களின் திறன் மின்மாற்றியின் திறன் கூட்டுதல்;
* பள்ளிக் கல்வித் துறை சார்பில்,
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஒடுகம்பட்டி, கீரனூர், புலியூர், வேலாடிப்பட்டி, கல்லாக்கோட்டை, கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மாத்தூர் (சிறப்பு), பெருங்களூர், அரிமளம், கழனிவாசல், கீழபழுவஞ்சி, விராலிமலை, இலுப்பூர், ஆலவயல், சூரியூர், மேலசிவபுரி, ஆவுடையார்கோவில், திருமயம், நகரப்பட்டி, மணமேல்குடி, நல்லூர், அம்மாப்பட்டினம், பொன்னகரம், கொத்தமங்கலம், சிலட்டூர், நெடுவாசல், வல்லத்திராக்கோட்டை, கீரமங்கலம், திருநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 46 கோடியே 88 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர்கள், குடிநீர் வசதிகள், கூடுதல் கட்டடங்கள், ஆய்வகம்;
* பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில்,
கறம்பக்குடியில் 8 கோடியே 41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கல்லூரி மாணவியர்களுக்கான சமூக நீதி விடுதிக் கட்டடம்;
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்,
கறம்பக்குடியில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம்;
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில்,
அறந்தாங்கி, திருமயம், கந்தர்வக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஆளபிறந்தான், செங்கீரை, வத்தனாகோட்டை ஆகிய கிராமங்களில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள்;
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில்,
கறம்பக்குடியில் 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகக் கட்டடம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய படகு நிறுத்தும் தளம் மற்றும் நிருவாக கட்டடம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் 1 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படகு நிறுத்தும் தளம் தூர் வாருதல் மற்றும் வலை பின்னும் கூடம் அமைக்கும் பணிகள்;
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்,
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டடம் அமைக்கும் பணிகள் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதிக் கட்டடங்களை மேம்படுத்தும் பணிகள், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், சுப்ரமணியபுரம் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்;
* நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்,
அறந்தாங்கி நகராட்சி வார சந்தை அருகில் 20 கோடியே 54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், புதுக்கோட்டை மாநகராட்சி, ராசாப்பட்டி நடுநிலைப் பள்ளியில் 34 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சிவபுரம் தொடக்கப்பள்ளியில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள், திருக்கட்டளை தொடக்கப்பள்ளியில் 72 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கூடிய பள்ளிக் கட்டடம், புதுக்கோட்டை மாநகராட்சியில் கீழ 4ஆம் வீதி மற்றும் வடக்கு 2ஆம் வீதியில் 7 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண்டல அலுவலகக் கட்டடம், புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் 3 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணிகள்;
என மொத்தம், 201 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 103 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.

=> புதுக்கோட்டை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் :-
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்,
12,618 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள்,
13 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், 217 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் திருமண உதவித்தொகை, இயற்கை மரண மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 3,107 பயனாளிகளுக்கு இலவச நத்தம் செட்டில்மெண்ட் வீட்டுமனைப் பட்டாக்கள்,
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில்,
2,874 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 47 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகள், விலையில்லா தையல் இயந்திரங்கள் ஆகிய உதவிகள், தாட்கோ சார்பில், 76 பயனாளிகளுக்கு ஆட்டு பண்ணை, ஆட்டோ, கணிணி விற்பனை நிலையம், கறவை மாடுகள், சுமைதூக்கும் வாகனம், டிராக்டர், நிலவுடைமை திட்டம், புகைப்பட கடை, வாகன விற்பனை கடை, வாடகை வாகனம், வீட்டு உபயோக பொருட்கள் கடை, வெல்டிங் கடை, ஜெராக்ஸ் கடை ஆகியவற்றிற்கான கடன் உதவிகள்;
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்,
1,101 பயனாளிகளுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வுத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வீடுகள், 4 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம்,
* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்,
17,107 பயனாளிகளுக்கு சமுதாய முதலீட்டு நிதி, வங்கிக் கடன் இணைப்பு, வட்டார வணிக வள மையம் தொழிற்கடன் ஆகியவற்றின் கீழ் உதவிகள், 88 பயனாளிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள், 122 பயனாளிகளுக்கு அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் உதவிகள்;
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில்,
3,105 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன், டாப்செட்கோ கடன், டாம்கோ கடன், பணியாளர் கூட்டுறவு சங்க கடன், பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், வீடு அடமானக் கடன், வீட்டுவசதிக் கடன்கள், 500 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 20 பயனாளிகளுக்கு ஓய்வூதியம், இயற்கை மரணத்திற்கான உதவிகள்,
* வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில்,
718 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நெல் நடவு இயந்திரங்கள் வழங்குதல், தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசனம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில்,
190 பயனாளிகளுக்கு அழகு கலை நிலையம், ஆடு வளர்ப்பு, இட்லி கடை, இலவச தையல் இயந்திரம், எண்ணெய் வியாபாரம், கரவை மாடு, கல்வி உதவித் தொகை, காய்கறி வியாபாரம், கீற்று முடைதல், கூடை பின்னல், தையல் தொழில், பால் வியாபாரம் போன்ற பல்வேறு சிறு தொழில்கள் தொடங்குவதற்கு நிதி உதவிகள், 1,077 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்;
* மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில்,
100 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 300 பயனாளிகளுக்கு திறனுக்கேற்ப வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவிகள்,
* எரிசக்தித் துறை சார்பில்,
350 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், விவசாய மின் இணைப்புகள் ஆகியவற்றின் கீழ் உதவிகள்,
* கால்நடை பாரமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பில்,
216 பயனாளிகளுக்கு அலைகள் திட்டத்தின் கீழ் மீனவ மகளிருக்கு நுண் கடன் வழங்குதல், படகு நிறுத்தும் தளம் தூர் வாருதல், வலை பின்னும் கூடம் அமைத்தல், புதிய படகு நிறுத்தும் தளம் அமைத்தல், மீனவ மகளிருக்கு கடற்பாசி வளர்ப்பதற்கு மானியம், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கடற்பாசி வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி சான்று, மீன் உணவு பொருட்கள் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் சான்றுகள்;
என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 341 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 43,993 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.
இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, துரை வைகோ, கே.நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வீ.முத்துராஜா, தி.ராமச்சந்திரன், எம்.சின்னதுரை, பிரபாகரன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.அருணா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






