தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள் என்னென்ன? : முழு விவரம் உள்ளே!

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள் என்னென்ன? : முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து விழா சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள செயல்திட்டங்களை பட்டியலிட்டு, புதிய திட்டப்பணிகளையும் அறிவித்தார். அவை பின்வருமாறு,

“இந்த நிகழ்ச்சியின் மூலமாக 223 கோடி ரூபாய் மதிப்பிலான 577 முடிவுற்ற பணிகள் தொடங்கி வைத்து, 201 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 103 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 43 ஆயிரத்து 993 பேருக்கு 341 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக 766 கோடி ரூபாய்க்கான நலத்திட்டங்களை மக்களிடம் வழங்கக்கூடிய விழா இந்த விழா!

இன்றைக்கு திருமயத்தில் உருவாகியிருக்கும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான, அரசு மருத்துவமனையையும், அரிமளம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் சமத்துவபுரத்தையும் திறந்து வைத்திருக்கிறோம்.

இதற்கான ஒப்புதலை என்னிடம் வாங்கும்போது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடிய பணிகளின் பட்டியலை வாங்கிப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது! அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த பணிகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், 

  • திருமயத்திலும் – ஆலங்குடியிலும் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. 

  • புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டிருக்கிறது. 

  • புதுக்கோட்டை ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. 

  • திருமயம் தொகுதியிலும் – ஆலங்குடி தொகுதியிலும் - நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

  • புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் கீரனூர் வரை, 40 கோடி ருபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 

  • 344 அரசு பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

  • 33 திருக்கோயில் பணிகள் செய்யப்பட்டிருக்கிறது

புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள் என்னென்ன? : முழு விவரம் உள்ளே!

இப்படி ஏராளமான திட்டங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே இருக்கலாம். இத்தனை திட்டங்கள் செய்திருக்கிறோம் என்று திருப்தி அடைபவன் இல்லை நான்… இன்னும் இன்னும் செய்ய வேண்டும் என்று ஊக்கம் கொண்டு உழைப்பவன்…

இங்கு வந்து உங்களை சந்தித்துவிட்டு, புது அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பேனா? அப்படியே வெளியிடாமல் சென்றால் நீங்கள் விட்டுவிடுவீர்களா? நம்முடைய அமைச்சர்கள் என்னை விடுவார்களா? விடமாட்டார்கள். இந்த நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை நான் வெளியிட இருக்கிறேன். 

முதலாவது அறிவிப்பு - அறந்தாங்கி வட்டத்தில் இருக்கும் வீரகொண்டான் ஏரி, செங்கலநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் 15 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். 

இரண்டாவது அறிவிப்பு – கீரமங்கலம் பகுதி விவசாயிகளின் நலன் கருதி, அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திட குளிர்ப்பதன கிடங்கு 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். 

மூன்றாவது அறிவிப்பு - ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும், விளானூர் ஊராட்சி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடகாடு ஊராட்சியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும். 

நான்காவது அறிவிப்பு - புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும். 

அடுத்த இரண்டு அறிவிப்பும் கொஞ்சம் ஸ்பெஷல் அறிவிப்பு!

ஐந்தாவது அறிவிப்பு -  கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கந்தர்வகோட்டை ஊராட்சி – பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

ஆறாவது அறிவிப்பு - பொன்னமராவதி பேரூராட்சி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொன்னமராவதி பேரூராட்சி - நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். 

இந்த அறிவிப்புகள் எல்லாம் மிக விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.”

banner

Related Stories

Related Stories