மு.க.ஸ்டாலின்

6 தளங்கள்.. 560 படுக்கைகள்... கொளத்தூரில் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ - திறந்து வைத்தார் முதலமைச்சர் !

கொளத்தூரில் ‘பெரியார் அரசு மருத்துவமனை’-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

6 தளங்கள்.. 560 படுக்கைகள்... கொளத்தூரில் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ - திறந்து வைத்தார் முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.2.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, கொளத்தூர், பெரியார் நகரில், நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் ரூ.210.80 கோடி செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு மருத்துவமனையான “பெரியார் அரசு மருத்துவமனை”-யை திறந்து வைத்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ரூ.10.82 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள “விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைத்து, 4 “விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, 72 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.

6 தளங்கள்.. 560 படுக்கைகள்... கொளத்தூரில் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ - திறந்து வைத்தார் முதலமைச்சர் !

தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் “மக்களைத் தேடி மருத்துவம்” சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48”, சுகாதார நடைபாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கொளத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட பெரியார் நகரில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 8.3.2023 அன்று தரை மற்றும் மூன்று தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, மேலும் சில சிறப்பு சிகிச்சைகளை வழங்குவதற்காக கூடுதலாக மூன்று தளங்களுடன் விரிவாக்கம் செய்திட 7.3.2024 அன்று முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

6 தளங்கள்.. 560 படுக்கைகள்... கொளத்தூரில் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ - திறந்து வைத்தார் முதலமைச்சர் !

பெரியார் நகரில் கட்டப்பட்டுள்ள இப்புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.2.2025 அன்று “பெரியார் அரசு மருத்துவமனை” என்று பெயர் சூட்டி ஆணையிட்டார். மொத்தம் ஆறு தளங்களோடு பல்வேறு புதிய உயர் சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் 210 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இப்புதிய மருத்துவமனை, தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், 20 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகள், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, 3 அறுவை அரங்கங்கள், நவீன இரத்த வங்கி, புனர்வாழ்வு மையம், போதை மறுவாழ்வு மையம், இரண்டாம் தளத்தில் முழு உடல் பரிசோதனைக்கூடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், மூன்றாம் தளத்தில் பிரசவ வார்டு, மகப்பேறு மற்றும் குடும்ப கட்டுப்பாடு வார்டு, குழந்தைகள் நல மருத்துவப் பிரிவு, நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, மைய ஆய்வகம், எக்ஸ்ரே பிரிவு, ஐந்தாம் தளத்தில் இருதயவியல் பிரிவு, 3 அறுவை அரங்கங்கள், தோல்நோய் வார்டு, கேத் லேப், ஆறாம் தளத்தில் சிறுநீரகவியல், இரத்தக்குழாய் சிறப்பு சிகிச்சை வார்டுகள், சிறுநீரக கற்களுக்கான ESWL சிகிச்சை, புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு, நிர்வாக அலுவலகம் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மொத்தம் 560 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மக்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்திடும் வகையில் இப்புதிய மருத்துவமனைக்கு 102 மருத்துவர்கள், 194 செவிலியர்கள், 79 மருத்துவம் சாரா பணியாளர்கள், 20 அமைச்சுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

6 தளங்கள்.. 560 படுக்கைகள்... கொளத்தூரில் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ - திறந்து வைத்தார் முதலமைச்சர் !

=> “விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையங்களை திறந்து வைத்து, “விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் :

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு, உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், கடலூர், தருமபுரி, தென்காசி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 10.82 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள “விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்” உட்கோட்ட அளவில் 9 மையங்களும், வட்டார அளவில் 38 மையங்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன.

கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களில் மாற்றுத்திறனாளிகளின் நாள்பட்ட மறுவாழ்வு சிகிச்சை தேவைகளை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக ஆறு மறுவாழ்வு சிகிச்சைகளை ஒரே இடத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

6 தளங்கள்.. 560 படுக்கைகள்... கொளத்தூரில் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ - திறந்து வைத்தார் முதலமைச்சர் !

இதற்கென 160 வகையான மறுவாழ்வு உபகரணங்கள் இம்மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுபயிற்சி, இயன்முறைசிகிச்சை, செயல்முறை சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற ஆறு சேவைகளை வழங்க வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்ற இயன்முறை சிகிச்சை, சிறப்புக்கல்வி மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வட்டார அளவிலான மையங்களிலும் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் 2 சிறப்பு கல்வியாளர்கள் மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வட்டார அளவிலான சேவை மையங்களிலும் அதே வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கும் சென்று மறுவாழ்வு சிகிச்சை அளிப்பார்கள்.

6 தளங்கள்.. 560 படுக்கைகள்... கொளத்தூரில் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ - திறந்து வைத்தார் முதலமைச்சர் !

மேலும், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் 2.24 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள 4 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை ஊர்திகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று

கொடியசைத்து தொடங்கி வைத்து, 72 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.

ஒருங்கிணைந்த சேவை மையங்களுக்கு நேரடியாக வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஊர்திகள், நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணித்து, அவ்வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்ப இயன்முறை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, சிறப்புக்கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும்.

banner

Related Stories

Related Stories