மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் : ரூ.323.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் !

மொத்தம் ரூ.882 கோடி செலவில் 231 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 35,003 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழுப்புரம் : ரூ.323.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.1.2025) விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.424 கோடியே 98 இலட்சம் செலவில் 231 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 133 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 35,003 பயனாளிகளுக்கு ரூ.323.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

=> விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தல் :

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 4 கோடியே 71 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் திண்டிவனத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் முகையூர் இரயில்வே இணைப்பு சாலையிலிருந்து காரணை ஊராட்சி செல்லும் சாலையில் உள்ள பம்பை வாய்காலில் 4 கோடியே 8 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்பாலம், கொடுங்கால் - வீரசோழபுரம் சாலையில் உள்ள பம்பை வாய்காலில் 1 கோடியே 66 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம், கொங்கம்பட்டு ஊராட்சியில் ரங்கரெட்டிபாளையம் சாலையின் நடுவே 6 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் பாலம், பிடாரிப்பட்டு – அணிலாடி சாலையில் உள் வராக நதியின் மேல் 6 கோடியே 13 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம், நகர்-நாகல்பாக்கம் சாலையில் 3 கோடியே 86 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம்;

சத்தியகண்டனூர், ஆனாங்கூர், பாப்பனப்பட்டு, காரணை, அரசமங்கலம், சொரப்பூர், வீராணம், நவமால் மருதூர், திருமங்கலம், நொச்சலூர், அய்யங்கோவில்பட்டு, திருப்பாச்சனூர், மானூர் ஊராட்சி –செந்தமிழ் நகர் மற்றும் புதிய காலனி, வேம்பி, தீவனூர், மாத்தூர்திருக்கை, நரசிங்கராயன்பேட்டை, கப்ளாம்பாடி, கோவில்புறையூர், நாரணமங்கலம், தாழங்குணம், ஒட்டை, வீரப்பாண்டி, ஆவுடையார்பட்டு, ஆலப்பாக்கம், கீழ்எடையாளம், கொல்லியங்குணம், அரசமங்கலம் ஊராட்சி – ஏ.கே.குச்சிப்பாளையம் மற்றும் காலனி, நெடிமொழியனூர், ரெட்டணை, பொம்மையார்பாளையம், தேவதானம்பேட்டை, பில்லூர், பிடாகம், நாயனூர், ஆரியூர், ஆலங்குப்பம், கீழையூர், மேல்கூடலூர், கோனூர், ஏந்தூர் ஊராட்சி – அறியந்தாங்கல் பகுதி மற்றும் ஏந்தூர் காலனி, பிரம்மதேசம், மாம்பழப்பட்டு, சேமங்கலம், டி. தேவனூர், ஆனாங்கூர், ஆலத்தூர், நல்லூர், ஊரணி, செய்யாங்குப்பம், சிறுவாடி, ஆகிய ஊராட்சிகளில் 10 கோடியே 6 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 54 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள்;

கொங்கராயனூர், அகரம்சித்தாமூர், ஆனாங்கூர் ஊராட்சி – ஆனாங்கூர் காலனி மற்றும் சாமிப்பேட்டை, அடுக்கம், கீழ்பசார், ஏமப்பேர், சு.கொல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம், நாயனூர், செ.புதூர், கீழ்பூதேரி, தும்பூர், அய்யங்கோயில்பட்டு, அரசூர், ஏமப்பூர், ஒட்டை, பருதிபுரம், நாரணமங்கலம், சி.என். பாளையம், நீர்பெருத்தகரம், எரளூர், அகூர், ராவுத்தன்குப்பம், பாப்பன்சாவடி, ஆட்சிப்பாக்கம், சாலை, அவ்வையார்குப்பம், மேல்பேரடிகுப்பம், வீரணாமூர் ஆகிய ஊராட்சிகளில் 4 கோடியே 1 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் 29 அங்கன்வாடி கட்டடங்கள்;

விழுப்புரம் : ரூ.323.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் !

கீழ்எடையாளம், மகாதேவிமங்கலம், மதுரப்பாக்கம், மேலதனூர், பாதிரி, தென்புத்தூர், முக்குணம், பெண்நகர், நயினார்பாளையம் ஆகிய 9 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 3 கோடியே 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டடங்கள்;

புளிச்சப்பள்ளம் ஆதிதிராவிடர் நல ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அனுமந்தை மற்றும் ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 22 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் 3 சமையலறை கட்டடங்கள்;

அருங்குறுக்கை, காரப்பட்டு மற்றும் ஆசூர் ஊராட்சிகளில் 1 கோடியே 9 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையங்கள், இருவேல்பட்டு மற்றும் வளத்தி ஊராட்சிகளில் 1 கோடியே 4 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் வட்டார பொது சுகாதார மையங்கள்;

கண்டம்பாக்கம், மரகதபுரம், பாப்பனப்பட்டு, நவமால் மருதூர், அரியலூர் திருக்கை, செ.புதூர், செல்லபிராட்டி, வி.சாத்தனூர், ரெட்டிக்குப்பம், கோரைக்கேணி, காயல்மேடு, ஏனாதிமங்கலம், கெங்கராம்பாளையம், பரசுரெட்டிபாளையம், ஆசூர், வெண்மணியாத்தூர் ஆகிய ஊராட்சிகளில் 1 கோடியே 93 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் 16 நியாய விலை கடைகள்;

மழையம்பட்டு, மேலமங்கலம், எம்.புதுப்பாக்கம், நடுக்குப்பம், கீழ்பேட்டை, கோவடி, ஓமிப்பேர், வைடப்பாக்கம், சிட்டாம்பூண்டி, ஜெயங்கொண்டான், கடலி, சிறுதலைபூண்டி, அகரம் சித்தாமூர், வழுதாவூர், கணபதிப்பட்டு, சாலை, தென்னாளப்பாக்கம், பக்கிரிபாளையம், பள்ளிநெலியனூர், மாதம்பட்டு, பெருங்கலம்பூண்டி, உடையாநத்தம், வேலியம்பாக்கம், கள்ளிப்பட்டு, வைரபுரம், சிறுவை, திருவக்கரை, அருங்குறுக்கை, பெரியசெவலை, பெண்ணைவலம், வீரசோழபுரம், வேம்பி, முப்புளி, நொளம்பூர் ஆகிய ஊராட்சிகளில் 11 கோடியே 96 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் 34 ஊராட்சி செயலக கட்டடங்கள்;

கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் முதலியகுப்பம் முதல் அனிச்சங்குப்பம் வரை 58 இலட்சம் ரூபாய் செலவில் தார் சாலை, ஏந்தூர் ஊராட்சியில் ஏந்தூர் முதல் அரியந்தாங்கல் வரை 56 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை, தாதம்பாளையம் பகுதியில் 48 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை, ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள காலனியில் 33 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை, வளையசெட்டிகுளம் பகுதியில் 27 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை, வேலதாங்கல் முதல் வெள்ளக்குளம் வரையில் 22 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை;

கஞ்சனூர் ஊராட்சியில் 15 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் பால் கொள்முதல் நிலையம், நெடிமொழியனூர் ஊராட்சியில் 15 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் பால் கூட்டுறவு சங்க அலுவலகக் கட்டடம்; கீழ்புதேரி, கீழ்பசார், நல்லாத்தூர், பாங்குளத்தூர், கீழ்மன்னூர், வெள்ளிமேடுபேட்டை, சி.என். பாளையம் ஆகிய ஊராட்சியில் 73 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் 7 உணவு தானிய கிடங்குகள்; கெடார், இராம்பாக்கம், வி.அகரம், பெருவளூர், எதப்பட்டு, நல்லாமூர் ஆகிய ஊராட்சிகளில் 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் 6 நூலகக் கட்டடங்கள்;

அகூர் மற்றும் அவ்வையார்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் 1 கோடியே 39 இலட்சம் செலவில் ஊராட்சி அளவிலான சுயஉதவி குழு கட்டடங்கள்; வேம்பி, பெருங்காப்பூர், வரிக்கல், பாடிப்பள்ளம், தாழங்குணம் ஆகிய ஊராட்சிகளில் 40 இலட்சம் ரூபாய் செலவில் 5 நாடக மேடைகள்; வெண்மணியாத்தூர் மற்றும் கோனூர் ஆகிய ஊராட்சிகளில் 14 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கிராம நிருவாக அலுவலகக் கட்டடங்கள்;

விழுப்புரம் : ரூ.323.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் !

திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் மாட்டுக்காரன்சாவடி கிராமத்தில் 9 இலட்சத்து 25 ஆயிரம் செலவில் பிளாஸ்டிக் நெகிழ்வு மேலாண்மை அலகு கட்டடம்; தொள்ளமூர் மற்றும் இளையான்பட்டு ஆகிய ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 68 இலட்சம் செலவில் 2 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடம்; என ஊரக வளர்ச்சி மற்றும் ஊரட்சித் துறை சார்பில் ரூ.64 கோடியே 46 இலட்சத்து 92 ஆயிரம் செலவில் முடிவுற்ற 189 பணிகள்;

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் வழுதரெட்டி கிராமத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் மற்றும் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு 4 கோடி ரூபாய் செலவில் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவகம்;

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் திண்டிவனம் நகராட்சிக்கு ரூ.268 கோடி செலவில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கெங்கவரம் மற்றும் வெள்ளிமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 66 இலட்சம் ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்பு கட்டடங்கள், கீழ்பெரும்பாக்கத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்ட நகர ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 கோடியே 59 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய எம்.ஆர்.ஐ. இயந்திரம் மற்றும் ரூ.48 இலட்சம் செலவில் 10 படுக்கைகள் கொண்ட கட்டண வார்டு, இருவேல்பட்டு, வளத்தி மற்றும் சிறுவந்தாடு ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் வட்டார பொது சுகாதார அலகுகள், அருங்குருக்கை, காரப்பட்டு, மேல்சேவ்வூர், பரிக்கல்பட்டு ஆகிய இடங்களில் 1 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், வானூர் அரசு மருத்துவமனை மற்றும் அனுமந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 இலட்சம் ரூபாய் செலவில் சித்த மருந்தகக் கட்டடங்கள்;

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் வீடூரில் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட மீன் விதை வளர்ப்பு பண்ணை, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் உறைவிந்து இருப்பு மற்றும் பகிர்மான மையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டப் பிரிவு;

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் முகையூர் ஒன்றியம் வீரங்கிபுரம் கிராமத்தில் 40 இலட்சம் ரூபாய் செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மையம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1 கோடியே 5 இலட்சம் ரூபாய் செலவில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பரிவர்த்தனைக் கூடம், திருவெண்ணைநல்லூரில் 3 கோடி ரூபாய் செலவில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்;

பள்ளி கல்வித் துறை சார்பில், அத்தியூர்திருக்கை மற்றும் வீரணாமூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3 கோடியே 81 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறை கட்டடங்கள்;

கனிம வளத்துறை சார்பில் வானூர் வட்டம், திருவக்கரையில் 5 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம், நூலகம் மற்றும் அரங்கம்;

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் வல்லம் மற்றும் மயிலம் ஆகிய இடங்களில் 3 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;

தாட்கோ சார்பில் சிங்கனூர் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி, கழிக்குப்பம், கப்பூர் மற்றும் கொடுக்கூர் ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளிகள், ஆவுடையார்பட்டு மற்றும் வி. நாரயுர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளிகள், புளிச்சப்பள்ளம் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 11 கோடியே 58 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகம்;

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் திண்டிவனம் வட்டம், பட்டணம் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டையில் SPV உறுப்பினர்களை கொண்ட 6 கோடியே 65 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் நவீன பல்வண்ண அச்சுக்குழுமம்;

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில், பேரணி -பெரியதச்சூர் சாலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்திற்கு மாற்றாக 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம், விழுப்புரம் - மாம்பழப்பட்டு திருக்கோவிலூர் சாலை - விழுப்புரம் -திருவண்ணாமலை (வழி) அகரம்சித்தாமூர் சாலையில் பம்பை ஆற்றின் குறுக்கே 6 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம், தென்கோடிப்பாக்கம் - கொந்தமூர் சாலையில் உள்ள நரசிம்ம ஆற்றின் குறுக்கே 6 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலம், விக்கிரவாண்டி - நேமூர் சாலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்திற்கு மாற்றாக 9 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம், என 28 கோடியே 46 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிலான 4

முடிவுற்ற பணிகள்;

கூட்டுறவுத் துறை சார்பில் சாத்தாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் 10 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கள்ளப்புளியூர் கிளை, விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 15 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட அவலூர்பேட்டை கிளை; - என மொத்தம் 424 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் 231 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

விழுப்புரம் : ரூ.323.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் !

=> விழுப்புரம் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் மாரங்கியூர் – ஏனாதிமங்கலம் சாலையில் கோரையாற்றின் குறுக்கே 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம், வெள்ளிமேடுபேட்டை-பாண்டி (வழி) மைலம் சாலையில் 32 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருவழித்தடத்தை நான்குவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிபடுத்துதல் பணி மற்றும் பெட்டி வடிவ கல்வெர்ட் திரும்பக்கட்டுதல், கர்ப்வடிவ மையத்தடுப்பான் அமைத்தல், சந்திப்பு மேம்படுத்துதல் பணிகள்; முண்டியம்பாக்கம் – பாண்டிச்சேரி சாலையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழித்தடத்திலிருந்து கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணி மற்றும் பெட்டி வடிவ கல்வெர்ட் திரும்ப கட்டுதல் பணிகள், தாழங்குணம் - மேல்வயலாமூர் சாலையில் பிரியும் அரிசனர் காலணி சாலையை 1 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, பெரியநொளம்பை சாலையை 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எதப்பட்டு – மன்சூராபாத் சாலையை 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, என மொத்தம் 96 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஒலக்கூரில் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்;

அருமலை, பில்ராம்பட்டு, மேல்வாலை, காடகனூர், வடகரைதாழனூர், கண்டாச்சிபுரம், ஆனத்தூர், சேமங்கலம், பெரியசெவலை, அருங்குருக்கை, பாவந்தூர், அண்டராயநல்லூர், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, டி.புதுப்பாளையம், எரலூர், ஆலகிராமம், சே.கொத்தமங்கலம், கொணமங்கலம், கொழுவாரி, செங்கமேடு, நெமிலி, நாராயணபுரம், ராயபுதுபாக்கம், அன்னியூர், முண்டியம்பாக்கம், மதுரப்பாக்கம், பிரம்மதேசம், அனுமந்தபுரம, போரூர், அரியலூர் திருக்கை, அதனூர், மாம்பழபட்டு, பனமலை, சிறுவாலை, வேம்பி, ஆகிய ஊராட்சிகளில் 4 கோடியே 2 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 36 உணவு தானிய கிடங்குகள்;

ஆயந்தூர், வீரபாண்டி, காடகனூர், வீரசோழபுரம், செம்மார், சரவணப்பாக்கம், தென்மங்கலம், பேரங்கியூர், ஆனத்தூர், ஆலங்குப்பம், மேலமங்கலம், சே. கொத்தமங்கலம், நடுவனந்தல், ரெட்டணை, கொடிமா, எம்.புதுப்பாக்கம், வடநெற்குணம், வைடாப்பாக்கம், எறையனூர், குன்னம், திருச்சிற்றம்பலம், மாத்தூர், பூத்துறை, கணக்கன்குப்பம், மழவந்தாங்கல், பாடிப்பள்ளம், சிறுணாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், தச்சம்பட்டு, பழவலம், ஜம்போதி, செம்மேடு, தேவதானம்பேட்டை, கவரை, கொடுக்கன்குப்பம், வி. அகரம், திருமங்கலம், முக்குனம், மேல்ஒலக்கூர், தொன்டூர், ஆகிய இடங்களில் 3 கோடியே 28 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 40 அங்கன்வாடி கட்டடங்கள்;

கெங்கராம்பாளையம், இராம்பாக்கம், பூவரசன்குப்பம், சின்னபாபுசமுத்திரம், பூத்துறை, ராவுத்தன்குப்பம், பொம்மையார்பாளையம், குயிலாப்பாளையம், மேல்எடையாளம், சத்தியமங்கலம், மழவந்தாங்கல், கோணை, கழுப்பெரும்பாக்கம், இல்லோடு, மேல்அத்திப்பாக்கம், ஆனத்தூர், அவியூர், இராஜம்புளியூர், மரூர், ஆகிய ஊராட்சிகளில் 2 கோடியே 25 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 19 நியாய விலைக் கடைகள்;

கோண்டூர், கணக்கன்குப்பம், நரசிங்கராயன்பேட்டை, திருவம்பட்டு, மேல்ஒலக்கூர் ஆகிய ஊராட்சி மன்றக் கட்டங்களுடன் இணைத்து 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 பொது சேவை மையக் கட்டடங்கள், என மொத்தம் 15 கோடியே 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 101 புதிய திட்டப் பணிகள்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஒலக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதாரக் கட்டடம், மரக்காணம் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவசர விபத்து பிரிவுக்கான கூடுதல் கட்டடம், வளவனூர் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், என 7 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகள்;

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் வளத்தி ஆகிய இடங்களில் 4 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சார்-பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்;

பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோவடி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 2 கோடியே 11 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 8 வகுப்பறை, கழிவறை மற்றும் குடிநீர்வசதியுடன் கட்டடம்;

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 3 கோடியே 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி;

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திண்டிவனம் நகராட்சி, கிடங்கல்-1 பகுதியில் கால்வாயின் குறுக்கே 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் மற்றும் திண்டிவனம் நகராட்சி, கிடங்கல்-2 பகுதியில் 2 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம்;

- என மொத்தம், 133 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 116 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம் : ரூ.323.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் !

=> விழுப்புரம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் :

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 10,770 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், திருமண உதவித்தொகை, முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 113 பயனாளிகளுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள், மகளிர் திட்டத்தின் கீழ் 8317 பயனாளிகளுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்கள், தனிநபர் கடன்கள், சமுதாயம் முதலீட்டு நிதி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் உதவிகள்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1310 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், நுண்ணுயிர் பாசனத் திட்டம், விதை கிராமத் திட்டம், தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் உதவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 120 பயனாளிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், சோலார் உலர் களம், சோலார் பம்பு செட் உள்ளிட்ட பல்வேறு உதவிகள், கூட்டுறவுத் துறை சார்பில் 2389 பயனாளிகளுக்கு கலைஞர் கைவினை மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கடன் திட்டம், கல்வி கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 428 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பத் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 63 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், பித்தளை தேய்ப்பு பெட்டிகள், தாட்கோ சார்பில் 1020 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 500 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரேல் ஸ்கூட்டர்கள், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள், நவீன காதொலி கருவிகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவிகள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 35,003 பயனாளிகளுக்கு 323 கோடியே 71 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.

banner

Related Stories

Related Stories