அரசியல்

“மாநிலங்களை கட்டுக்குள் வைக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு” - கழக மாணவரணி செயலாளர் CVMP எழிலரசன் கண்டனம்!

கூட்டாட்சியைச் சீர்குலைத்து, மாநில அரசின் உரிமைகளை பறிக்க நினைக்கும் யு.ஜி.சி.-க்கு கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மாநிலங்களை கட்டுக்குள் வைக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு” - கழக மாணவரணி செயலாளர் CVMP எழிலரசன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கூட்டாட்சியைச் சீர்குலைத்து, மாநில அரசின் உரிமைகளை பறிக்க நினைக்கும் யு.ஜி.சி.-க்கு கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :

எல்லோரும் படித்து, எல்லோரும் வேலைக்குப் போய், எல்லோரும் தலைநிமிர்வது பிடிக்காத பாசிச பா.ஜ.க. அரசால் தொடர்ச்சியாக கல்வித் துறையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. கல்வியைச் சிதைப்பதற்காகவே புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள். அரசுப் பொதுத் தேர்வு என்ற பெயரால் வடிகட்டி, வடிகட்டி அனைவரையும் கல்வியைத் தொடர முடியாமல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை திராவிடமாடல் நாயகன், தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 06.01.2025 அன்று பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC), பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்சத் தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் விதிமுறைகள்-2025க்கான வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது, முழுவதுமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், பல்கலைக்கழகங்களை உருவாக்கி நிர்ணயிக்கும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக்கூடிய வகையில் அது அமைந்துள்ளது.

குறிப்பாக, கல்லூரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கும், பதவி உயர்வுக்கான விதிமுறைகளில் பரிந்துரைக்கும் பல திருத்தங்கள் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்காக என்பதை விட, கல்வியை தனியார் மயமாக்குதலில் உள்ள காரணத்தையே அது உணர்த்துகிறது. துறைகளுக்கு தொடர்பில்லாத அன்னியர்களை ஆசிரியர்களாக பரிந்துரைக்கிறது; ஆசிரியர் பணி நலன்கள் தொடர்பான அரசு சட்டங்களை ரத்து செய்யவும்; குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவத்திற்கான உயர்கல்வி பாடத்திட்டங்களை சத்தற்ற பொதுக்கல்வியாக்கும் திட்டங்கள்; பள்ளி கல்வியை ஓரங்கட்டிவிட்டு தேசிய நுழைவுத் தேர்வுகள் அடிப்படையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நடைமுறைப்படுத்துதல்; அதன்மூலம் கார்ப்பரேட் ‘கோச்சிங்’ நிறுவனங்களை கொழுக்க வைக்க உதவும் விதிகள்; உயர்கல்வியை நிறைவு செய்ய விடாமல் நலிந்த சமூக பிரிவு மாணவர்களின் ‘இடைநிற்றலை’ ஊக்குவிக்கும் சமூக அநீதிக்கான விதிகள்; துணைவேந்தர் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வு குழுக்களிலும் ஒன்றியத்தின் நியமன உறுப்பினர்களின் ஆதிக்கத்திற்கு வழி செய்யும் விதிகள்; ஒட்டுமொத்தத்தில் கல்வி அமைப்புகளின் ஜனநாயக கூறுகளை அறவே ஒழிக்கும் விதிகளாக உள்ளது.

“மாநிலங்களை கட்டுக்குள் வைக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு” - கழக மாணவரணி செயலாளர் CVMP எழிலரசன் கண்டனம்!

பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில், மாநில அரசுக்கான உரிமையை அறவே நீக்கிவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கே முழு அதிகாரத்தையும் வழங்கும் விதிமுறை மாநில உரிமைக்கு எதிரானது. கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது. அத்துமீறலுக்குரியது. மேலும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பதற்கு கல்வியாளர் மற்றும் கல்வித் தகுதி, அனுபவம், சிறப்பு தகுதிகள் உள்ளிட்டவைகளை கடந்து தொழிற்சாலையிலிருந்து, பொதுத்துறை நிறுவனத்திலிருந்து வல்லுநர் என்ற வகையில் கல்வியாளர் அல்லாத (Non Acadamician) நபர்களை துணைவேந்தராய் நியமிக்கும் ஆபத்தான முடிவுக்கு பரிந்துரைக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை 2020ஐ ஏற்கவில்லை என்றால் அத்தகைய பல்கலைக்கழகங்கள் பட்டப் படிப்பை நடத்த இயலாது. அதாவது பல்கலைக்கழகம் பட்டம் வழங்கினாலும் செல்லாது. இந்த அறிவிப்பு மாநிலப் பல்கலைக்கழகங்களை முடக்கும் செயல் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆக, இனி மாநிலம் என்ற ஒரு அரசமைப்பே இருக்காது என்ற நிலையை நோக்கி ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசின் செயல்பாடு இருப்பதன் வெளிப்பாடாக பல்கலைக்கழக வரைவு விதிகள் இருப்பதை நாம் உணர வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிப்பதில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி, கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 09.01.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

அந்தத் தனித் தீர்மானம் மீது உரையாற்றுகிற வாய்ப்பினை நான் பெற்றேன். அப்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் ஏற்றியிருக்கின்ற இந்த ‘தீ’ இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பரவட்டும், பரவட்டும் என்று சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்தேன்.

கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாசிச பா.ஜ.க. அரசின் பிற்போக்கு தனத்தை எதிர்க்கும், முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலங்களான டெல்லி, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்காளம், இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (யு.ஜி.சி. 2025 வரைவு நெறிமுறைகள்) அறிக்கைக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்யவும், தீர்மானம் நிறைவேற்றவும் கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, பெரும்பாலன மாநிலங்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்ததோடு, கேரளா அரசு தனது சட்டமன்றத்திலும் இந்த வரைவு நெறிமுறைக்கு எதிராக தனித் தீர்மானத்தை கடந்த 21.01.2025 அன்று நிறைவேற்றியது.

யு.ஜி.சி.-யின் இவ்விதிகள் மாநிலங்களின் கல்வி அமைப்புகளின் தன்னாட்சி உரிமைகளை இல்லாமல் செய்து விடுகின்றன. உயர்கல்வியை சீர்குலைத்து, உயர்கல்விப் பாடத்துறைகளை நீர்த்து போக செய்து, தரமான உயர்கல்வியை நம் மாணவர்களுக்கு மறுத்து விடுகின்றன. பலவீனமான சமூகப் பிரிவு மாணவர்களின் இடைநிற்றலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

“மாநிலங்களை கட்டுக்குள் வைக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு” - கழக மாணவரணி செயலாளர் CVMP எழிலரசன் கண்டனம்!

தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை சீர்குலைக்கு பாசிச பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக விளங்கும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் வரைவு நெறிமுறைகள் தற்போதுள்ள உயர்கல்வியை முற்றிலுமாக வணிகமயமாக்கும் வகையிலும், ஆசிரியர்-மாணவர் நலன்களை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் உள்ளதை உணர்ந்து, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று தி.மு.க. மாணவர் அணி கடந்த 09.01.2025 அன்று நடைபெற்ற மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத்தொடர்ந்து, தி.மு.க. மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் கொண்ட தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO-TN) சார்பில் கடந்த 10.01.2025 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்கல்வியில் பீடுநடைபோடும் தமிழ்நாட்டின் முதன்மையை வீழ்த்துவதற்காகவே பாசிச பா.ஜ.க. அரசு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு மூலம் கொண்டுவந்துள்ள திருத்தங்களை எதிர்த்து, மாணவர் நலன், ஆசிரியர் நலன், உயர்கல்வியின் தரம், கல்வி அமைப்புகளின் தன்னாட்சி உரிமை, மாநிலங்களின் சட்டப்பூர்வமான தன்னாட்சி உரிமை, இந்திய கூட்டாட்சியின் அடிப்படை ஆகியவற்றை பாதுகாத்திட நாம் அனைவரும் மக்கள் இயக்கமாக செயல்பட்டு, நம் அனைவரின் கண்டன குரல்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். மக்கள் இயக்கமாக ஒன்றிணைவோம்; யு.ஜி.சி.யின் அத்துமீறலை முறியடிப்போம்!

ஒன்றிய பா.ஜ.க. அரசு கல்வித்துறையில் யு.ஜி.சி. அமைப்பை வைத்துக் கொண்டு மேற்கொள்ளும் அதிகார அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்த தி.மு.க.-வின் நீண்ட கால கோரிக்கையான கல்வியை ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே ஒரே தீர்வாக இருக்க முடியும்.

இது வெறும் கல்வி தொடர்புடையது அல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எப்படி எந்த விவாதமும் இல்லாமல் ஒன்றிய பிரதேசம் (Union Territory) ஆக்கப்பட்டதோ, அதைவிட மோசமாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிர்வாக அலகுகளாக மாற்றும் மிகப்பெரிய சட்ட நடவடிக்கை என்பதை நாம் உணர வேண்டும்.

அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் சட்டம் இயற்றும் உரிமைப் பெற்ற மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றப்பட்டு அமைக்கப்படும் பல்கலைக்கழகங்களை, எவ்வித சட்டம் இயற்றுகிற உரிமையும் அற்ற, நெறிமுறைகளை மட்டும் வழங்கக்கூடிய யு.ஜி.சி. என்ற அமைப்பைக் கொண்டு ஒரு மாபெரும் சட்ட விதிமீறலையும், குடியாட்சி தன்மையை குழிதோண்டி புதைக்கும் வேலையை செய்து, மாநில உரிமைகளை களவாட நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரத் தன்மையை மக்கள் நாம் உணர வேண்டும்.

“மாநிலங்களை கட்டுக்குள் வைக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு” - கழக மாணவரணி செயலாளர் CVMP எழிலரசன் கண்டனம்!

எனவே, கழக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளின் முன்பாக இது தொடர்பாக சுவரொட்டிகளை ஒட்டி, தமிழ் மாணவர் மன்றம் மூலமாக கல்லூரி மாணவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு, கல்வி உரிமை, மாநில உரிமை, கூட்டாட்சி தத்துவம், சமூகநீதி, சமவாய்ப்பு, அரசியமைப்பு சட்டம் ஆகியவற்றை காத்திட, யு.ஜி.சி. வெளியிட்டுள்ள 2025 வரைவு நெறிமுறைகள் அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 05.02.2025-க்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், கழக உடன்பிறப்புகள், தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள், கழக மாணவர் அணியினர் அனைவரும் பல்கலைக்கழக நிதிநல்லைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை எதிரித்து, நமது மாநில அரசின் கல்வி உரிமையை பாதுகாக்க #UGC Draft Guidelines 2025 வரைவுக்கு எதிரான உங்கள் எதிர்ப்புகளை / கருத்துகளை / கண்டனங்களை draft-regulations@ugc.gov.in என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Subject : Withdraw UGC Draft Guidelines 2025

I strongly oppose the University Grants Commission’s (UGC) Draft Guidelines 2025 and I request UGC to immediately withdraw it.

1. The draft gives full powers to the Chancellors (state governors who are Union government appointees) in the selection of Vice-Chancellors of universities. The proposed changes deny state governments any say in selecting V-Cs for state-run universities that are “fully funded and managed by the state governments”.

2. Another key change in the draft regulations is that university Vice-Chancellors need not be academicians/professors, but can be individuals at senior levels in industry or public administration. This will lead to corporatisation and saffronization of education.

3. Education is a subject under the Concurrent List in our Constitution, and hence we consider that the move of the UGC to issue this notification unilaterally as unconstitutional.

These guidelines are against the federal principles upheld by the nation. This move not only reduces the autonomy of state governments but also threatens to undermine the diversity and inclusivity that are central to India’s higher education system.

Hence I request UGC to immediately withdraw your Draft Guidelines 2025.

மேலும், மேற்குறிப்பிட்ட கருத்துகளை பொதுமக்கள் அனைவரும் தங்களது சமூக வலைதங்களில் பகிர்ந்து, @PMOIndia @dpradhanbjp @EduMinOfIndia @ugc_india @PIB_India ஆகிய பக்கங்களை இணைத்து பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories