மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டையில் 25ஆயிரம் வேலைவாய்ப்புகள்! - புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

ரூ.1,500 கோடி முதலீடு மற்றும் 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ராணிப்பேட்டையில் அமையவுள்ள ஹோங்ஃபு காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ராணிப்பேட்டையில் 25ஆயிரம் வேலைவாய்ப்புகள்! - புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.12.2024) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்ஃபு (Hong Fu) நிறுவனம் 1,500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலைக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

அந்த இலக்கினை எய்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் அவர்கள் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டையில் 25ஆயிரம் வேலைவாய்ப்புகள்! - புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!

தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபு குழுமம்

தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங் ஃபு இண்டஸ்ட்ரீயல் குழுமம் இருபதுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட பன்னாட்டு குழுமம் ஆகும். இக்குழுமம் விளையாட்டு காலணிகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதன் மூலம் உலகளவில் இரண்டாவது பெரிய காலணி உற்பத்தியாளராக திகழ்ந்து வருகிறது.

இக்குழுமம் நைக், கன்வர்ஸ், வேன்ஸ், பூமா, யுஜிஜி, அண்டர் ஆர்மர் போன்ற சர்வதேச அளவில் வணிகமுத்திரை கொண்ட நிறுவனங்களுக்கு காலணிகள் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவைகளையும் வழங்கி வருகிறது.

சிப்காட் பனப்பாக்கம் தொழில் பூங்காவில் காலணி உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், ஹோங்ஃபு நிறுவனத்திற்கு, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழில் பூங்காவில் 200 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்நிறுவனம் தற்போது 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவுள்ளது. இத்திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (டிசம்பர் 16) அடிக்கல் நாட்டினார்.

banner

Related Stories

Related Stories