தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு புதிய நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், அ.தி.மு.க.விற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறுகிக்கொண்டிருக்கிறது. அதற்காக, முன்பை விட மிகவும் ஆவேசமாக பேசி வருகிறார் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு பதிலடி தரும் வகையில், அமைச்சர் ரகுபதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல ‘வாழைப்பழ காமெடியை’ போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி!
திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ-சமூக மேம்பாட்டு செயல்திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் மாண்புமிகு முதலமைச்சருக்கான சிம்மாசனத்தை அளித்திருக்கிறார்கள். குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றி பேசினால் மக்களை ஏய்த்து, திமுகவை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் பழனிசாமி!
ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓபிஎஸ் வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு உங்களுடையது! ஆட்சிக்காக பாஜகவிடம் அண்டிப் பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு இப்பொழுதும் கூட பாஜகவை எதற்குமே கண்டிக்காமல் ‘வலிக்காமல் வலியுறுத்திவிட்டு’ மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள்” என X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.