மு.க.ஸ்டாலின்

ஜெயா TV ஒளிப்பதிவாளருக்கு மருத்துவ நிதியுதவி - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு !

ஜெயா தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் த.அமல்ராஜ் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 இலட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

ஜெயா TV ஒளிப்பதிவாளருக்கு மருத்துவ நிதியுதவி - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

​ஜெயா தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவரும் த.அமல்ராஜ் தற்பொழுது நோய்வாய்ப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள போதிய பண வசதி இல்லாத நிலையில், அவருக்கு அரசு மருத்துவ மனையில் தரமான சிகிச்சை மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சை கட்டணம் செலுத்திட கூடுதல் நிதியுதவி வழங்கிடுமாறு அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலம் இன்று (26.06.2024) முற்பகல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு வரப்பெற்றது.

​தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவரும் த.அமல்ராஜ் அவர்களை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றி தரமான சிகிச்சை அளிக்கவும், அவர் கோரியுள்ள கூடுதல் நிதியுதவியாக ரூ.2 இலட்சத்தினை உடனடியாக வழங்கிட உத்தரவிட்டார்கள்.

ஜெயா TV ஒளிப்பதிவாளருக்கு மருத்துவ நிதியுதவி - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு !

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவினைத் தொடர்ந்து த.அமல்ராஜ் அவர்கள் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு தரமான சிசிச்சைகளை வழங்கிடவும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், த.அமல்ராஜ் அவர்கள் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்கான கட்டணத் தொகையை செலுத்திட ஏதுவாக தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து ரூ. 2 இலட்சத்திற்கான காசோலை அவரின் குடும்பத்தினரிடம் இன்று ( 26.06.2024) பிற்பகல் வழங்கப்பட்டது.

​பத்திரிகையாளர் நலன்களை பேணிக்காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு.த.அமல்ராஜ் அவர்களின் உடல் நலக் குறைவு குறித்து தகவல் பெறப்பட்ட ஒரு சில மணித்துளிகளில் இந்த நிதியுதவினையும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் வழங்கிட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். காசோலையினைப் பெற்றுக்கொண்ட த.அமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், தங்களது கோரிக்கையினை ஏற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

banner

Related Stories

Related Stories