மு.க.ஸ்டாலின்

மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு : களத்தில் இறங்கி நிவாரண உதவிகளில் ஈடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

முதலமைச்சர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு : களத்தில் இறங்கி நிவாரண உதவிகளில் ஈடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் காலையிலிருந்து இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்றும் முதலமைச்சர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு : களத்தில் இறங்கி நிவாரண உதவிகளில் ஈடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் பகுதிகளில் ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். பின்னர், ஓட்டேரி, நல்லான் கால்வாயில் நீர்வரத்தினை பார்வையிட்டார்.

தொடர்ந்து, குக்ஸ் சாலை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார். மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை படகுகளில் அனுப்பி வைத்தார். பின்னர், அகரம் - ஆனந்தன் பூங்கா, பாலாஜி நகர் பிரதான சாலை மற்றும் செல்வி நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அம்மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.

மிக்ஜாம் புயல், கனமழை பாதிப்பு : களத்தில் இறங்கி நிவாரண உதவிகளில் ஈடுபடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

கொளத்தூர் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு நீரை வெளியேற்றி, வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக முதலமைச்சர் இன்று காலை, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தரமணி, பாரதிநகர் மற்றும் துரைப்பாக்கம், கல்குட்டை பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும், நேப்பியார் பாலம் அருகில், கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மழைநீர் சீராக வடிகிறதா என்பதையும் பார்வையிட்டார். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து களத்தில் மக்கள் பணியாற்றி வருகிறார்.

banner

Related Stories

Related Stories