மு.க.ஸ்டாலின்

“இவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கக் கூடாது !” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி - மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கக் கூடாது !” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருவள்ளூரில் இன்று சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எ.வ.வேலு, ஆர்.காந்தி, கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் கழக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல்நிலை காரணமாகக் காணொலி மூலமாகக் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திடீரென்று காய்ச்சலும் - தொண்டை வலியும் எனக்கு ஏற்பட்டுவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாற்றாமல் போனதற்காக நான் முதலில் என்னுடைய வருத்தத்தை மிகுந்த பணிவோடு உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் - தனித்தனியாக சொல்ல வேண்டும் என்று ஆசை, ஆனால் தொண்டை சரியில்லை. ஒட்டுமொத்த அத்தனை பேருக்கும், இதில் உண்மையாக பாடுபட்டு பணியாற்றிய நம்முடைய கட்சி உடன்பிறப்புகள், சகோதரர்கள், நண்பர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாவற்றிற்கும் மேல் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கக் கூடாது !” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

நான் அங்கு வரவில்லை என்று சொன்னாலும் என்னுடைய நினைவுகள் எல்லாம் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது… எப்படி சென்று கொண்டிருக்கிறது என்றுதான் என்னுடைய சிந்தனை எல்லாம் இருந்தது. தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தேன். அதனால் நீங்கள் யாரும் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அதிகம் பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி வந்து இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன். இப்போது என்னுடைய பேச்சைச் சுருக்கமாக தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.

இதைத்தொடர்ந்து நிகழ்வில் கழக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாசித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முழு உரை பின்வருமாறு:

"காத்திருக்கும் நாடாளுமன்றக் களத்தில், கனிந்து வரும் வெற்றிக் கனியைப் பறிக்க – விளைந்து நிற்கும் வெற்றியை வீடு சேர்க்க நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கான தொடக்கப்புள்ளியான இந்த வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், திருச்சி, இராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலையைத் தொடர்ந்து, இன்று திருவள்ளூரில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார் மாண்புமிகு ராணிப்பேட்டை காந்தி அவர்கள். ராணிப்பேட்டை காந்தி அவர்களை திருவள்ளூர் காந்தி என்றே இன்றைக்கு சொல்லலாம். அந்தளவிற்கு இங்கேயே இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

காந்தி அவர்களிடம் ஒரு பணியைக் கொடுத்தால், அதைச் சிறப்பாகத்தான் செய்வார். இதனை இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகப் பார்த்து பாராட்டிக்கொண்டு வருகிறேன். அவர் மனதில் பட்டதை பட்டென்று சொல்வார்; என் மனதில் நினைப்பதை சட்டென்று செய்வார். அதுதான் காந்தி! அவருக்கு உறுதுணையாக இருந்த திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்.

“இவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கக் கூடாது !” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இன்று காலை முதல்,

* ’வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும்’ என்ற தலைப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்களும்,

* ’வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்’ குறித்து, செயல்வீரர் மாண்புமிகு தா.மோ. அன்பரசன் அவர்களும்,

* ’சமூக வலைத்தளங்களின் பயன்பாடு, செயல்படுத்த வேண்டிய முறைகள்’ குறித்து, திராவிட இயக்க எழுத்தாளர் சகோதரர் லெனின் அவர்களும்,

* கழகத்தின் வரலாறு, அடிப்படைக் கொள்கைகள், திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள், நவீன தமிழ்நாட்டை உருவாக்க நாம் எடுத்த முயற்சிகள், திராவிட மாடல் ஆட்சி ஆகியவைக் குறித்து,

நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களும், எதார்த்த பேச்சாளர் – திராவிடப் பற்றாளர் இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களும் - எனக் காலை முதல் இவர்கள் மூலமாக கொள்கை வழிகாட்டுதலும், தேர்தல் பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல, எல்லா தேர்தலுக்கும் பயன்படும். இது எல்லாவற்றையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும்.

இன்று 11 மாவட்டக் கழகங்களில் இருந்து, 11 ஆயிரத்து 569 பேர், ஆற்றல்மிகு மாவட்டக் கழகச் செயலாளர்களால் அழைத்து வரப்பட்டுள்ளீர்கள். இதனை ஒருங்கிணைத்த,

* திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சா.மு.நாசர்

* திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் - திரு. டி.ஜெ.கோவிந்தராஜன்

* திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - திரு. எஸ்.சந்திரன்

* சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் - அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு

* சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன்

* சென்னை தென்மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - திரு. மயிலை த.வேலு

* சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - திரு. நே.சிற்றரசு

* சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் - திரு. மாதவரம் எஸ்.சுதர்சனம்

* சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் - திரு. தா.இளையஅருணா

* காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் - அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன்

* காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - திரு. க.சுந்தர்

- ஆகிய அனைவர்க்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களுக்கும், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் முழுப் பொறுப்பு!

உங்களை நம்பித்தான் ’நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்று கம்பீரமாக முழங்குகிறோம்! அதே கம்பீரத்தோடு இன்றில் இருந்தே நீங்களும் தேர்தல் பொறுப்பாளராகக் கடமையாற்ற வேண்டும்!

அதற்கு,

* வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பது,

* முறையான வாக்காளரை நம்மை நோக்கி ஈர்ப்பது,

* வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வரவைப்பது என உங்களுடைய கடமைகளைச் சரியாக – முறையாகச் செய்ய வேண்டும்!

“இவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கக் கூடாது !” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். கழகத்துக்காக தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களையும் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கும் புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே, அரசின் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்துவிடும். அதை வைத்து, மக்களுக்கு உதவி செய்யுங்கள்.

வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களான நீங்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று அமைச்சர்களிடமும், மாவட்டக் கழகச் செயலாளர்களிடமும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உத்தரவாகவே நான் சொல்லியிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். இதனால் மக்கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என நமது திராவிட மாடல் அரசின் எல்லாத் திட்டங்களையும் நான் விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவையெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும்! இதே மாதிரியான சாதனைகள் ஒன்றிய அளவிலும் நிகழ்த்தப்பட வேண்டும் என்றுதான் இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கிறோம்.

இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்றால், நாம் செய்த, செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல், பா.ஜ.க.வின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும்!தமிழ்நாட்டுக்காக எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. பா.ஜ.க.வின் இந்தத் துரோகத்தையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பா.ஜ.க.வின் கைப்பாவையாக அத்தனை துரோகத்துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது, அடிமை அ.தி.மு.க.!

“இவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கக் கூடாது !” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இன்றைக்குப் பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களைப் பட்டியல் போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்! தி.மு.க.வும் இந்தியா கூட்டணியும் பா.ஜ.க.வின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது என்றுதான், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதனால்தான், வருமான வரித்துறை ரெய்டு எல்லாம் நடைபெறுகிறது.

ரெய்டுகள் மூலமாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல் நம்மையும் மிரட்டலாம் என்று பகல்கனவு காண்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கும், அச்சறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கமல்ல தி.மு.க.! 75 ஆண்டுகாலமாக இதையெல்லாம் எதிர்த்து நின்றுதான் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்; அந்த வெற்றி என்றைக்கும் தொடரும்!

வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்களுக்குத் தெரிகிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டு வெளியேகூட வருவதில்லை. ஆனால், இங்கு நம் தமிழ்நாட்டில், நம்முடைய இயக்கத்தினர் ஒவ்வொருவரையாகச் சோதனை செய்கிறார்கள். இப்போது அமைச்சர் சகோதரர் வேலு அவர்களைச் சோதனை செய்கிறார்கள். இப்படி, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையின் ரெய்டுகளில், வழக்குகளில் Conviction Rate எவ்வளவு என்று பார்த்தால், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் ஒரு விழுக்காடு கூட இல்லை.

வெறும் அரசியல் பழிவாங்கலுக்கான பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும்! அதனால்தான் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியம் என்று சொல்கிறேன். இந்தத் தேர்தலில் நாம் பெறப்போகிற வெற்றி என்பது, மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும்.

கொள்கை என்று எதுவுமே இல்லாமல், ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை நாசப்படுத்திய அடிமை அ.தி.மு.க.வும், தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பா.ஜ.க.வும், சுயநலத்தின் காரணமாக இந்த இரு கட்சிகளுக்கும் துணை போகும் அதன் கூட்டணிக் கட்சிகளும் - வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி, மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது!

இது, கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் கையில்தான் இருக்கிறது. நாற்பதுக்கும் நாற்பது என்கிற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். கழக உடன்பிறப்புகளாக நம்முடைய இலக்கு இதுதான். அதற்கு இன்று முதல் உழைத்தாக வேண்டும்! இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்! வளமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும்! அடுத்து வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம்!"

banner

Related Stories

Related Stories