மு.க.ஸ்டாலின்

"ஆட்சிக்கு வந்த 20 மாதத்தில் 2 முக்கிய சாதனைகள் இதுதான்": பாராட்டு விழாவில் பெருமிதத்துடன் சொன்ன முதல்வர்

மழை, வெள்ளத் தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ்களை வழங்கினார்.

"ஆட்சிக்கு வந்த 20 மாதத்தில் 2 முக்கிய சாதனைகள் இதுதான்": பாராட்டு விழாவில் பெருமிதத்துடன் சொன்ன முதல்வர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள காலங்களில், வெள்ளத் தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் விழா சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மழை, வெள்ளத் தடுப்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " மழை வெள்ள காலங்களில் தடுப்புப் பணிகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு விழா என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மகத்தான விழாவில் பங்கெடுத்துக் கொண்டுள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.மிகமிக மகிழ்ச்சியாக இந்த விழாவில் பங்கெடுக்கிறேன். எனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடந்துள்ளது. அதைவிட, உங்களை நான் பாராட்டும் விழா தான் என்னைப் பொறுத்தவரையில் மிகமிக முக்கியமானது என்ற வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஆட்சிக்கு வந்த 20 மாதத்தில் 2 முக்கிய சாதனைகள் இதுதான்": பாராட்டு விழாவில் பெருமிதத்துடன் சொன்ன முதல்வர்

நம்முடைய அரசு அமைந்து 20 மாதங்கள் ஆகிவிட்டது. இதில் மிக முக்கியமான இரண்டு சாதனைகள் மக்கள் மத்தியில் நமக்கு பாராட்டை ஏற்படுத்தித் தந்தது. ஒன்று கொரோனாவை வென்றோம் என்பது. இரண்டாவது மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்தோம் என்பது. கொரோனாவை கட்டுப்படுத்திய பிறகு உடனே அதிகப்படியான மழை பெய்தது, வெள்ளம் ஏற்பட்டது.

பத்தாண்டு கால ஆட்சியில் எதுவும் செய்யாமல் போனதால் முதல் முறை மழை, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் நமக்கே நெருக்கடிகள் ஏற்பட்டது. அதையே பாடமாக வைத்துக் கொண்டு செயல்பட்டோம். அடுத்த மழை - வெள்ளத்தில் எங்கும் தண்ணீர் நிற்கவில்லை என்ற சூழலை உருவாக்கினோம்.

அடுத்த மழை - வெள்ளத்தில் எங்கும் தண்ணீர் நிற்கவில்லை என்ற சூழலை உருவாக்கினோம். இவை இரண்டையும் மக்கள் பார்த்தார்கள்.சமூக வலைதளங்களில் - இது கடந்த முறை தண்ணீர் நின்ற இடம் ... அதே இடத்தில் இம்முறை தண்ணீர் நிற்கவில்லை ... என்று போட்டோ எடுத்து பொதுமக்களே போட்டார்கள்.

அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.என்னைப் பாராட்டினார்கள். ஊடகங்களில் பாராட்டினார்கள். நேரில் பார்க்கும் பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்தார்கள். இந்த பாராட்டு மழையில் நான் நனையக் காரணம் யார் என்றால் நீங்கள் தான். அதனால் தான் உங்களைப் பாராட்ட நான் வந்திருக்கிறேன்.

"ஆட்சிக்கு வந்த 20 மாதத்தில் 2 முக்கிய சாதனைகள் இதுதான்": பாராட்டு விழாவில் பெருமிதத்துடன் சொன்ன முதல்வர்

* பெருநகர சென்னை மாநகராட்சி-

* சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்_

* நீர்வளத்துறை-

* நெடுஞ்சாலைத்துறை_

* தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் -

* காவல்துறை ஆகிய துறைகளின்

அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் இங்கே பாராட்டப்படுகிறார்கள்.

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் - கே.என்.நேருவைப் பாராட்டுகிறேன். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேருவுக்கு நிகர் நேரு தான் என்று அவரை நான் பல மேடைகளில் பாராட்டி இருக்கிறேன். நான்கு கால் பாய்ச்சலில் வேலைகளை முடுக்கிவிடுவார். அன்பு - கோபம் இரண்டு அஸ்திரங்களையும் பாய்ச்சி பணிகளை முடித்துவிடுவார். அதேபோல் சென்னை மாநகராட்சி எல்லைக் குட்பட்ட அமைச்சர்களான மருத்துவம் மற்றும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் - இந்து சமய அறநிலையம் மற்றும் சென்னை மாநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் சேகர் பாபு - இரவு பகல் பாராமல் பணியாற்றினார்கள்.

சென்னை மாநகரத்தின் வணக்கத்துக்குரிய மேயர் பிரியா அவர்களும்- துணை மேயர் அவர்களும் 24 மணிநேரமும் மாநகருக்குள் சுற்றிச்சுழன்று பணியாற்றினார்கள்.சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்கள் - ஆற்றிய பணி என்பது மகத்தானது. அனைத்துத் துறைகளையும் ஒருமுகப்படுத்திச் செயலாற்றினார் ஆணையர்.

ஐந்து விரலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அது ஒரு கையின் பலமாக ஆகும். அப்படி ஐந்து துறைகளும் இணைந்து செயல்பட்டது. தண்ணீர் நின்றால் - ஒரு மணி நேரத்தில் மோட்டார் வைத்து எடுத்து அகற்றி விட்டது மாநகராட்சி! நீர் நிலைகளைத் தூர் வாரி வைத்திருந்தது நீர்வளத்துறை! சாலைகளை உடனடியாக சரி செய்தது நெடுஞ்சாலைத் துறை! சீரான மின்சாரத்தை வழங்கியது மின் துறை! பொதுமக்களுக்கு எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொண்டது காவல்துறை!

இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். எல்லார்க்கும் எல்லாம் என்பது மட்டுமல்ல திராவிட மாடல் ஆட்சி. எல்லோரும் சேர்ந்து ஒருங்கிணைந்து உழைப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

"ஆட்சிக்கு வந்த 20 மாதத்தில் 2 முக்கிய சாதனைகள் இதுதான்": பாராட்டு விழாவில் பெருமிதத்துடன் சொன்ன முதல்வர்

மழை வெள்ளக் காலத்தில் நல்ல பெயர் எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் அறிவேன். நான் இந்த சென்னை மாநகராட்சியின் மேயராக ஏழாண்டு காலம் இருந்தவன். சென்னையின் ஒவ்வொரு வார்டும் எனக்குத் தெரியும். மழை நின்றபிறகு அல்ல - மழை பெய்து கொண்டு இருக்கும் போதே கோட் போட்டுக் கொண்டு போய் பணிகளைப் பார்த்தவன் நான்.

எனக்கு முன்னால் அதிகாரிகளும் - அலுவலர்களும் - தூய்மைப் பணியாளர்களும் இருப்பார்கள். நான் மட்டுமல்ல, அவர்களும் மழையில் நனைந்த படியே பணியாற்றினார்கள். இது தான் மக்கள் பணியாகும். இது தான் தலைவர் கலைஞரின் பாணியாகும். இங்கிருக்கும் மூத்தபணியாளர்களுக்கு நினைவு இருக்கலாம் - இவர் தான் நம்முடைய தலைவர்.

ஒரு சம்பவம் நடந்ததும் உடனே அந்த இடத்துக்கு போய்விட வேண்டும், மக்களைப் பார்க்க வேண்டும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால் அதற்குக் காரணம் கலைஞர் ஊட்டிய உணர்வு. அவர் உருவாக்கிய பற்று பாசம்.

நம்பர் ஒன் முதலமைச்சர் - நம்பர் ஒன் தமிழ்நாடு - ஆகிய உயர்வும் பாராட்டும் என்பது தனிப்பட்ட இந்த ஸ்டாலினால் மட்டும் கிடைத்தது என்று நினைப்பவன் அல்ல நான். எனது உழைப்பால் மட்டுமே அடைந்த வெற்றி அல்ல, உங்கள் அனைவரது உழைப்பாலும் அடைந்த வெற்றி என்பதை ஊருக்கு உணர்த்துவதற்காகத் தான் இந்தப் பாராட்டுவிழாவை வெளிப்படையாக நடத்துகிறோம்.

"ஆட்சிக்கு வந்த 20 மாதத்தில் 2 முக்கிய சாதனைகள் இதுதான்": பாராட்டு விழாவில் பெருமிதத்துடன் சொன்ன முதல்வர்

இப்படி பாராட்டும் உள்ளம் அனைவருக்கும் வந்தாக வேண்டும். பாராட்டுவதை வெளிப்படையாகப் பாராட்ட வேண்டும். வெளிப்படையாக பாராட்டினால் தான் - அறிவுறுத்தவும் நாம் உரிமை பெறுவோம். அந்த வகையில்

* பெருநகர சென்னை மாநகராட்சி-

* சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்_

* நீர்வளத்துறை-

* நெடுஞ்சாலைத்துறை_

* தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் -

* காவல்துறை ஆகிய துறைகளின்

அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவரையும் பாராட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories