மு.க.ஸ்டாலின்

“முத்தான ஆட்சியின் முதலாண்டு.. சுடரொளி பரப்பி மிளிரட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி” : முரசொலி செல்வம் !

தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக உண்மையாகவும், உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறை வேற்றுவேன்” என்று பதவி ஏற்றார் கழகத் தலைவர் தளபதி என முரசொலி செல்வம் சிறப்பு கட்டுரை வரைந்துள்ளார்.

“முத்தான ஆட்சியின் முதலாண்டு.. சுடரொளி பரப்பி மிளிரட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி” : முரசொலி செல்வம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஏறத்தாழ கடந்த 11 ஆண்டு காலத்தில் 10 ஆண்டு காலம், ஆணவமும், அகங்காரமும் ஆறு ஆண்டு காலம் ஆட்சி செய்தது. அதனைத் தொடர்ந்து அடிமைத்தனம் நான்கு ஆண்டு காலம் ஆட்சி செய்து தமிழ்நாட்டை, தமிழ்மொழியை, தமிழ்க் கலாச்சாரத்தை, தமிழினத்தின் தனித்துவத்தை நிலை குலையச் செய்திருந்த நிலையில், கடந்த ஆண்டு மே திங்கள் 7 ஆம் நாள், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...’ எனும் கணீர் குரலோடு “தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக உண்மையாகவும், உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறை வேற்றுவேன்” என்று பதவி ஏற்றார் கழகத் தலைவர் தளபதி!

இருளாட்சியில் மிரண்டு நலிந்து கிடந்த தமிழகத்தில் உதயசூரியன் தகத்தகாயமாக தனது தங்கநிறக் கதிர்களைப் பரவவிட்டான்! கடந்த ஓராண்டில் ஓய்வற்ற உழைப்பு - பற்று கொண்டோரைக் கூட அருகே நெருங்கவிடாத தொற்று நோய் தழுவி துணையோடு அரசு இயந்திரம் சிறப்பாக செயல்படத் தொடங்கியது!

“புகழுரை, பொய்யுரை வேண்டாம் உண்மை நிலையை எடுத்துச் சொல்லுங்கள். தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்றிட உற்ற துணையாய் தொடர்ந்திடாது தடுத்திடும் எச்சரிக்கை ஒலியாகவும் அவை அமைந்தன. நேர்மையாகப் பணியாற்றுபவர்களைத் தட்டிக் கொடுத்தும், தவறுகள் நேர்கையில் தட்டிக் கேட்டும் நடைபெற்ற சிறப்புமிகு நிர்வாகத்தால் மாநில முதலமைச்சர்களில் நம்பர் 1 முதல்வர் என்ற பெய ரைப் பெற்றார் தளபதி!

அவரது “திராவிட மாடல்” ஆட்சி தமிழகம் தாண்டியும் எல்லை களைக் கடந்தும் பேச்சுப்பொருளானது! பதவி, பவிசுகள் வந்தவுடன் ‘நான்’ “என்னுடைய ஆட்சி” என்ற இறுமாப்புக் குரல் களை தமிழ்நாடு கேட்ட காலம் மறைந்து, ‘நமது ஆட்சி’! எனும் மக்கள் நெருக்க ஆட்சி நடைபெறத் தொடங்கியது!

தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேறத் தொடங்கின! நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளால் மக்கள் நிறைவு கொண்டு வாழ்த்தி நின்றனர்!

எதிர்க்கட்சிகளோ அம்மிக் குழவியை எடுத்து அடிவயிற்றில் குத்திக்கொண்டனர்! தளபதி ஸ்டாலினின் ஆட்சி சாதனை ஆட்சியாக மட்டும் மாறவில்லை; மக்களாட்சியாகவும் மலர்ந்தது!

“சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” எனப் பாரதி பாடிய மண்ணிலிருந்து ஒரு அரும்பின் அவலக் குரல்; “பக்கத்தில் உட்கார்ந்தால் கூட ‘நீ பக்கத்தில் உட்காராதே... நீ இந்த ஜாதிக்காரப் பொண்ணு...’ அப்படின்னு என்னை ஒதுக்கித் தள்ளுவார்கள்” - என்று ஆற்றாது ஒலித்த அந்த வெதும்பலைக் கேட்டதும் - தனது அமைச்சரை அனுப்பி, அந்த இளம் தளிருக்கு இன்ப அதிர்ச்சி தந்தது மட்டுமின்றி, தொலைபேசியில் ‘வீடியோ’வில் தோன்றி முதலமைச்சர் பேசியது கண்டு ஆயிரம் ‘வால்ட்’ பல்பு எரிவது போல முகமலர்ச்சி கொண்ட அந்தச் சிறுமி, ‘நாங்கள் வசிக்கும் எங்க வீட்டுக்கு வந்து சந்தித்தால் எங்களுக்கு இன்னும் சந்தோஷம்’ என கூறியபோது, “வருகிறேன்..... உன் வீட்டுக்கு வந்தா சாப்பாடு கொடுப்பியா?” - எனக் கேட்டது, மட்டுமின்றி அந்த இளம் சிட்டின் இல்லம் சென்று உணவு அருந்திய காட்சி.

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீ நிற்கும் உலகு (குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்) - எனும் அய்யன் வள்ளுவரின் குறளுக்கு சான்றான மாட்சி !

முத்தமிழறிஞர் கலைஞர் வழி தொடர்கிறது; இன்று போல சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் செய்தித் தாள்களே தகவல்களைத் முரசொலி செல்வம் நில்லுங்கள்” என்ற வேண்டுகோளைவிடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் களை முடுக்கினார். முதலமைச்சர் எந்தத்திக்கு நோக்கி பயணிக்கிறார்; என்பதைப்புரிந்து கொண்ட நிர்வாகம், முதல்வரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் தர முழு மூச்சுடன் இயங்கத் தொடங்கியது; அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற ஓரிரு தவறுகள் முதல்வரின் பார்வைக்கு வந்தபோது உடனடி நடவடிக்கைகள் மூலம் அவை ஒழுங்கு படுத்தப்பட்டன! அடுத்த தவறுகள் மக்கள் அற்றகுளம்போல அல்லாடி நின்றபோது, அல்லலுற்று ஆற்றாது நின்ற அந்த மக்களுக்கு உற்ற துணையாய் நின்ற முதல்வரது மனித நேயம் - அதனைக் கண்டு நெஞ்சு நெகிழ்ந்து கொண்டாடினர் மக்கள்.

தடம் புரண்டு கிடந்த நிர்வாகத்தை மீண்டும் சரியான பாதையில் செலுத்திசீர் செய்ய, தலைமைப் பொறுப்புகளில் திறமை மிகு அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்க - ஆற்றல் மிகு பொருளாதார வல்லுநர்கள் - இவர்கள் தந்த நேரத்தில், காலையில் எழுந்ததும் முதல்வர் கலைஞர் எதிர்க்கட்சி மற்றும் நடுநிலை செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் படித்து, ஆட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் எதிராக வரும் செய்திகளின் உண்மைத் தன்மை அறிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, உண்மையிருப்பின் நடவடிக்கைக்குப் பணித்து, நீதி, நேர்மை தவறா ஆட்சி நடத்திய தலைவர் கலைஞரின் ஆட்சியின் தொடர்ச்சியாக தளபதியின் நடவடிக்கைகள் தொடர்கின்றன!

அன்று செய்தித்தாள்கள்; இன்று சமூக ஊடகங்கள்!

அன்று உண்மைகள் பல; புனைவுகள் சில!

இன்றோ உண்மைகள் சில; புனைவுகள் பல!

இந்த நிலையிலும் ஊடகச் செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்த உடன், உதவும் கரங்களை நீட்டுகிறார் முதல்வர்!

அதிலே ஒரு எடுத்துக்காட்டுத் தான் மேலே கூறியது!

இப்படி பல சம்பவங்கள்; மக்களாட்சியின் மாண்பை உயர்த்தும் நிகழ்வுகள்; நமது தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முத்தான ஆட்சியின் முதலாண்டு நினைவுக்கு காட்டிக் கொண்டே இருக்கலாம்.

தொடரட்டும் அவரது பணி!

மீண்டும் மலரட்டும் எழுச்சிமிகு தமிழகம்!

சுடரொளி பரப்பி மிளிரட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

- முரசொலி செல்வம்

banner

Related Stories

Related Stories