மு.க.ஸ்டாலின்

மின் வாரியத்தை சீரழித்த அதிமுக; சீர்திருத்தத்தை ஏற்படுத்திய திமுக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இலவசமாக வழங்குகிறோம் என்றால் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மின் வாரியத்தை சீரழித்த அதிமுக; சீர்திருத்தத்தை ஏற்படுத்திய திமுக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு லட்சம் புதிய இணைப்புகள் வழங்குகிறோம். அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம் என்றால் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். செழிப்பாக அல்ல, சீரழித்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் கடந்த அதிமுக ஆட்சியினர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கான மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மின் வாரியத்தில் அதிமுக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி விட்டுச்சென்ற சீரழிவு குறித்தும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேறுபடுத்தியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

* 1.59 லட்சம் கோடிக்கு கடனில் இருக்கிறது மின்வாரியம்.

* ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி வட்டி கட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறது.

* மிக அதிகமான விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளார்கள்.

* குறுகிய கால ஒப்பந்தங்களாக இல்லாமல் மிக நீண்ட கால ஒப்பந்தங்களாகப் போட்டுள்ளார்கள்.

* அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பதிவேட்டில் இருப்பதும் - இருப்பு இருப்பதும் வித்தியாசமாக உள்ளது.

* பராமரிப்பு பணிகளே நடக்கவில்லை.

இப்படி கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தின் அலவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் இருந்து மின்சார வாரியத்தை காப்பாற்றுவதற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி,

* பராமரிப்புப் பணிகள் துரிதமாக நடந்துள்ளது.

* புதிய மின் திட்டங்களை திட்டமிட்டுள்ளோம். 17 ஆயிரத்து 980 மெகா வாட் மின்சாரத்தை வரும் பத்தாண்டு காலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது.

* ஏற்கனவே திட்டமிடுதலில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி இருக்கிறோம்.

* சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம். திருவாரூரில் சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.

* எரிவாயு இயற்கை மின் திட்டங்களை எண்ணூரில் அமைக்க சாத்தியக் கூறுகளை ஆராயச் சொல்லி இருக்கிறோம்.

* மின் இழப்பை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

* அனைத்துக்கும் மேலாக நுகர்வோர் குறைகளை உடனடியாக தீர்த்து வருகிறோம். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்துக்குள் மின்னகம் என்ற குறைதீர்வு மையத்தை நான் தொடங்கி வைத்தேன். அதில் பதியப்பட்ட புகார்களில் 90 சதவிகிதத்துக்கு மேலான குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது.

* மக்களோடு நேரடியாக உள்ள துறை மின்சாரத் துறை ஆகும். அந்தத் துறையை யாராலும் குறை சொல்ல முடியாத துறையாக ஆக்க வேண்டும் என்று அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவு போட்டுள்ளோம்.

ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு தந்தால் மின்சார கழகம் செழிப்பாக உள்ளது என நினைக்க வேண்டாம். கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரம் கழகத்தை சீரழித்து வைத்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி வட்டி கட்டும் நிலையில் உள்ளது தமிழக மின்சார கழகம்.

இன்றைக்கு புதிய இணைப்பு பெற்றவர்கள், மின்சாரத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மின்சாரம் தயாரிப்பு என்பதே மிகப்பெரிய செலவு வைக்கும் திட்டமாக இருக்கிறது. அதனால் முடிந்தளவு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துங்கள். கடந்த காலத் தவறுகளில் இருந்து இத்துறை மீள்வதற்கு அமைச்சர், அதிகாரிகள் மட்டும் உழைத்தால் போதாது பொதுமக்களும் தங்களால் முடிந்த ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை இன்று வழங்கி இருக்கிறோம். இது தமிழகத்தில் விவசாயப் புரட்சிக்கு அடித்தளமாக அமையட்டும்.

உற்பத்திப் பரப்பு அதிகமாக இது உதவிகள் செய்யட்டும். மின் துறை அமைச்சராக இருந்தாலும் வேளாண் துறையைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் சேர்த்து நல்லதொரு திட்டத்தைச் செயல்படுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பாராட்டுகிறேன். அனைவரும் சேர்ந்து இம்மண்ணையும் மக்களையும் காப்போம்.

banner

Related Stories

Related Stories