மு.க.ஸ்டாலின்

“எதிர்த்து பேசுபவர்களும் பாராட்டும்படி இருக்க அறிவுறுத்தியவர் கலைஞர்” - நினைவலைகளை பகிரும் மு.க.ஸ்டாலின்!

சட்டமன்றத் தேர்தல், அறிஞர் அண்ணாவுடனான நினைவலைகளை பகிர்ந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

“எதிர்த்து பேசுபவர்களும் பாராட்டும்படி இருக்க அறிவுறுத்தியவர் கலைஞர்” - நினைவலைகளை பகிரும் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியின் இரண்டாம் பாகம் !


செய்தியாளர்: கலைஞரை தவிர மனதிற்கு நெருக்கமான பெருந் தலைவர்கள் என்று உங்கள் அரசியல் ரீதியாக யாரைச் சொல்லுவீர்கள்?

கழகத் தலைவர்: எனக்கு மூப்பனாரை ரொம்பப் பிடிக்கும். அவர் ஒரு ‘காட்ஃபாதர்' போல எனக்கு. பலமுறை அட்வைஸ் பண்ணியிருக்கிறார்கள். நான் மேயராக இருந்தபோது எத்தனை பிரச்சினைகள் கார்ப்பரேஷனில் வரும். அவர் எனக்கு போனில் தொடர்பு கொண்டு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்து பேசுவார்கள். நாங்கள் கூட்டணியில்தான் வெற்றி பெற்றோம்.

ஆனால் அப்போது இடையில் சில பிரச்சினைகளிலெல்லாம் கராத்தே தியாகராஜன், வெற்றிவேலை எல்லாம் அழைத்து அட்வைஸ் செய்தார். அது மட்டுமில்லாமல் நான் மேயராக பதவி ஏற்றுக் கொண்டபோது ஒரு ‘கோல்டு பென்' என்னிடம் கொடுத்து, இந்தப் பேனாவை என் ஞாபகமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள். அதேபோல இன்னும் ஒன்று சொன்னார், இப்போது உன்னை பாராட்டக் கூடாது. நீ மேயராக வந்து உன்னுடைய சர்வீஸைப் பார்த்துதான் பாராட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அதே போல சர்வீஸைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டி பேசினார்கள். அதெல்லாம் மறக்க முடியாதது.

“எதிர்த்து பேசுபவர்களும் பாராட்டும்படி இருக்க அறிவுறுத்தியவர் கலைஞர்” - நினைவலைகளை பகிரும் மு.க.ஸ்டாலின்!

செய்தியாளர்: கூட்டணி கடந்தும் அந்த உறவு தொடர்ந்திருக்கிறதா?

கழகத் தலைவர்: நிச்சயமாக.

செய்தியாளர்: அண்ணாவுடன் பழகிய நினைவுகள் உங்களுக்கு உண்டு. அந்த நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?

கழகத் தலைவர்: நிச்சயமாக, அண்ணாவை வைத்து ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்த நாள் விழாவை கோபாலபுரத்தில் நடத்தியிருக்கிறோம். அதேபோல, மணிவிழா நேரத்தில் கூட அவரிடத்தில் தேதி வாங்குவதற்காக நேரடியாக அவர் வீட்டிற்குச் சென்று அவர் உடல் நலம் குன்றி படுத்திருந்த நேரத்தில் தேதி கேட்டு; அப்போது சிலம்புச் செல்வர் மா.பா.சிவஞானம்தான் பொன்னபாடை போர்த்துவதாக இருந்தது. ஆனால் அவர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். அதனால் அந்த நிகழ்ச்சியை அவர் இல்லாமல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அது ஒரு குறையாக இருந்தது. அதற்குப்பிறகு அவர் வந்தார். ஒரு வருடம் தான் இருந்தார். அதற்கு பிறகு அவர் மறைந்து விட்டார். அது ஒரு பெரிய குறை. அதுமட்டுமில்லாமல் அண்ணா ஓய்வு எடுக்க வேண்டும் என்று விரும்பினால், ஒன்று பேராசிரியர் வீட்டிற்கு செல்வார் அல்லது தலைவர் வீட்டிற்கு வருவார்.

“எதிர்த்து பேசுபவர்களும் பாராட்டும்படி இருக்க அறிவுறுத்தியவர் கலைஞர்” - நினைவலைகளை பகிரும் மு.க.ஸ்டாலின்!

அப்போது எங்களை எல்லாம் அழைத்து வைத்து ஜாலியாக பேசுவார். நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது? என்ன பேசுகிறார்கள்? என்னைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் கேட்பார்கள். மிகவும் இயல்பாகப் பேசுவார். காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு வண்டி அனுப்பி எங்களை அழைத்து வர சொல்லுவார்கள். மனோகரா வசனத்தை பேசச் சொல்லுவார். நான் என்னுடைய சகோதரர்கள் முத்து, அழகிரி எல்லோரும் சென்று, கோர்ட் தர்பார் சீன் போல டிராமா செய்வோம்.

செய்தியாளர்: உங்களுக்கு என்ன ரோல்?

கழகத் தலைவர்: எனக்கு பெரிய ரோல்! மு.க.முத்துதான் சிவாஜி, மனோகரா ரோல் பண்ணுவார். நான் அவர் கையைப் பிடித்துக் கொண்டு, விலங்கை பிடித்துக் கொண்டிருக்கக் கூடிய ரோல். அதுதான் என்னுடைய ரோல்.

செய்தியாளர்: அதில் ஏதாவது வசனங்கள் ஞாபகம் இருக்கிறதா? எங்களுக்கு சொல்லமுடியுமா?

கழகத் தலைவர்: முத்து பேசிய வசனம் ஞாபகம் வைத்திருக்கிறேன். “மனோகரா உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா? என்று கேட்பார். திருத்திக் கொள்ளுங்கள், அழைத்து வரவில்லை. சங்கிலியால் பிணைத்து இழுத்து வரச்சொன்னீர்கள். என் கட்டளையை தெரிந்திருப்பாய் நீ. கட்டளையா இது” என்று வசனம் சொல்லியிருப்பார். இதெல்லாம் கலைஞருடைய வசனங்கள். இதை ரசித்து கேட்பார். மு.க.முத்து நல்லா பாட்டு பாடுவார். அவரை பாடச்சொல்லி கேட்பார். கூட இருந்து நானும் சேர்ந்து பாடியிருக்கிறேன்.

“எதிர்த்து பேசுபவர்களும் பாராட்டும்படி இருக்க அறிவுறுத்தியவர் கலைஞர்” - நினைவலைகளை பகிரும் மு.க.ஸ்டாலின்!

செய்தியாளர்: என்ன பாட்டு ஞாபகம் இருக்கிறதா?

banner

Related Stories

Related Stories