மு.க.ஸ்டாலின்

இந்தியை காப்பதை விடுத்து, கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள் - அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

நாட்டை இந்திதான் ஒருங்கிணைப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதற்கு தி.மு.க. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியை காப்பதை விடுத்து, கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள் - அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தி பேசாத மாநிலத்து மக்களிடையே மத்திய பாஜக அரசு இந்தி மொழியை திணிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது நாடறிந்தது. இதற்காக புதிய கல்விக்கொள்கை மூலம் மும்மொழி கொள்கையை கொண்டு வருவது, சமஸ்கிருதம் இந்தி கற்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என்றெல்லாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று இந்தி மொழி தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த நாட்டையும் இந்தி மொழிதான் ஒருங்கிணைக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவில் தெரிவித்திருந்தார். மேலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அடையாளத்துக்கும் பயனுள்ள சக்திவாய்ந்த ஊடகமாக இந்தி திகழ்கிறது எனக் குறிப்பிட்டிருண்டார்.

இந்தியை காப்பதை விடுத்து, கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள் - அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும் எனக் கேள்வி எழுப்பி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா , இந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்?

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை அமித்ஷா உணர வேண்டும்!

இந்தியைக் காப்பாற்றுவதை விட, கொரோனாவில் இருந்து இந்தியரைக் காப்பாற்றுவதில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

banner

Related Stories

Related Stories