மு.க.ஸ்டாலின்

பாவேந்தர் மகன் மறைவு: “தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சிறந்த எழுத்தாளர், கவிஞர் - அனைவரையும் கவர்ந்த மிகச் சிறந்த பேச்சாளர் என மன்னர் மன்னருக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாவேந்தர் மகன் மறைவு: “தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், தமிழறிஞருமான மன்னர் மன்னன் மறைவை அடுத்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “'புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞருமான கலைமாமணி மன்னர் மன்னன் தனது 92-வது வயதில் உடல் நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தியறிந்து சொல்லொணாத் துயரமுற்றேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர்; சுமார் 50 நூல்கள் எழுதிய அவர்; புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து- அச்சங்கத்திற்குச் சொந்தக் கட்டடம் கட்டியவர். தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட அவர், சிறந்த எழுத்தாளர், கவிஞர் - அனைவரையும் கவர்ந்த மிகச் சிறந்த பேச்சாளர்!

நமக்கெல்லாம் புரட்சிக் கவிதைகள் தந்த பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் வெளியிட்ட அவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டியவர்.

இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியும், மொழிப் போராட்டத்தில் பங்கேற்று சிறைச் சென்றவருமான அவரது மறைவு நாட்டிற்கும், இலக்கியம் மற்றும் தமிழ்கூறும் நல்லுலகிற்கும் தாங்க முடியாத - ஈடு கட்ட முடியாத பேரிழப்பாகும்.

மன்னர் மன்னன் அவர்களை இழந்து வாடும் அவரது மகன்கள், மகள் ஆகியோருக்கும் - உறவினர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் - கவிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories