மு.க.ஸ்டாலின்

Covid19 பரவுகிறது; தற்காலிகமாக CAAக்கு எதிரான போராட்டத்தை ஒத்திவையுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பரவி வருவதால் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Covid19 பரவுகிறது; தற்காலிகமாக CAAக்கு எதிரான போராட்டத்தை ஒத்திவையுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 32வது நாளாக போராடி வரும் இஸ்லாமியர்களை நேரில் சந்தித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.

அப்போது, பேசிய அவர், சி.ஏ.ஏவை ரத்து செய்யக்கோரி பெறப்பட்ட இரண்டு கோடிக்கும் மேலான கையெழுத்துகளை குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் அளித்ததை சுட்டிக்காட்டினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மாநிலங்களவையில் வாக்களித்தன் மூலம் அ.தி.மு.கவும், பா.ம.கவும், இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே பச்சை துரோகம் இழைத்து விட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க அமைச்சர்கள் இரண்டு பேர் அண்மையில் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்ததாகவும் ஆனால், அந்த கடிதத்தை அவர் பிரித்துக்கூட பார்க்கவில்லை என்றும் கூறினார்.

மேலும், சி.ஏ.ஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் பல்வேறு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அ.தி.மு.க அமைச்சர்களை அமித்ஷா எச்சரித்ததாகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து, தி.மு.க அறிவித்துள்ள ஒத்துழையாமை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

banner

Related Stories

Related Stories