மு.க.ஸ்டாலின்

“எடப்பாடி அரசுக்கு விருது கொடுத்தவனை முதலில் அடிக்கணும்”- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களும் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றி வரும் நிலையில்,அதனை தட்டிக்கேட்கும் யோக்கியதை கூட இல்லாத அரசே தமிழ்நாடு பெற்றுள்ளது என மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

“எடப்பாடி அரசுக்கு விருது கொடுத்தவனை முதலில் அடிக்கணும்”- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜாவின் இல்லத் திருமண விழா சென்னை கோபாலபுரம் அருகே உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

”ஜாதி, மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தக்கூடிய குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருவதற்கு கண்டனம் தெரிவித்தார்.

கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசும் குடியுரிமை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், இத்தகைய கொடுமையான சட்டங்களை தட்டிக்கேட்கக்கூட யோக்கியதை அற்ற அரசு தமிழகத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது” என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,” கொலை, கொள்ளை, கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை முழுமூச்சாக கொண்டு அ.தி.மு.க அரசு இயங்கி வருகிறது. ஆனால், அதற்கு நல்லாட்சிக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது.

விருதை கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும்.” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மணமக்கள் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசை போல மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்காமல் பரஸ்பரமாக கேள்வி கேட்க வேண்டும். அதுதான் சம உரிமை என பெரியார் சொன்னார்.” எனவும் மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories