மு.க.ஸ்டாலின்

தி.மு.கவின் வெற்றியை தடுக்க அ.தி.மு.க சதி; நள்ளிரவில் மாநில தேர்தல் ஆணையரிடம் மு.க.ஸ்டாலின் முறையீடு

வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை அறிவிக்காமல் தாமதமாக்கி வருவது தொடர்பாக நள்ளிரவில் தேர்தல் ஆணையரை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முறையிட்டுள்ளார்.

 தி.மு.கவின் வெற்றியை தடுக்க அ.தி.மு.க சதி; நள்ளிரவில் மாநில தேர்தல் ஆணையரிடம் மு.க.ஸ்டாலின் முறையீடு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.கவின் வெற்றியை தடுப்பதற்காக முடிவுகளை அறிவிக்காமல் அ.தி.மு.க முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக நேற்று நள்ளிரவில் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முறையிட்டுள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்து போது பேசிய விவரம்;

“நாங்க கொடுத்த எந்த புகாருக்கும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. எந்தெந்த பகுதிகளிலெல்லாம் தி.மு.க. முன்னிலை வகித்தும், வெற்றி பெற்றும் வருகிறதோ அங்கேல்லாம் திட்டமிட்டே ஆளும் தரப்பினர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வாக்கு எண்ணிக்கையை தாமதமாக்கிக்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகியும் அறிவிக்காமல் தாமதப்படுத்தி அ.தி.மு.கவினர் வெற்றி பெற்றது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என கழக நிர்வாகிகள் சார்பில் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

 தி.மு.கவின் வெற்றியை தடுக்க அ.தி.மு.க சதி; நள்ளிரவில் மாநில தேர்தல் ஆணையரிடம் மு.க.ஸ்டாலின் முறையீடு

இது தொடர்பாக தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையரிடத்தில் தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவும் மாலை நேரத்தில் வந்து முறையிட்டதற்கு எந்த பதிலும் இல்லை.

இதற்கிடையில் நீதிமன்றத்தை நாடி அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட போது நீதிபதிகளும் தேர்தல் ஆணையத்திடம் முறையாக வாக்கு எண்ணிக்கையை நடத்த அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் ஆளுங்கட்சியினரின் அராஜகங்கள் கட்டுக்கடங்காமல் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அதனை தேர்தல் அதிகாரிகளும் கைக்கட்டி வேடிக்கை பார்த்து ஜனநாயக படுகொலை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

காலை முதல் எண்ணப்பட்டு வந்த வாக்குகளில் வெறும் 30% முடிவுகளே வெளிவந்துள்ளது. இன்னும் 70% வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் இனியும் என்னவெல்லாம் அக்கிரமங்களை செய்ய அ.தி.மு.கவினர் காத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த முறைகேட்டுகளுக்கு எதிராக தி.மு..க சார்பில் நடவடிக்கைகள் எடுக்கவிருக்கிறோம்.

 தி.மு.கவின் வெற்றியை தடுக்க அ.தி.மு.க சதி; நள்ளிரவில் மாநில தேர்தல் ஆணையரிடம் மு.க.ஸ்டாலின் முறையீடு

ஆகையாலேயே இந்த இரவு வேளையிலும் வந்து தேர்தல் ஆணையரை மீண்டும் சந்தித்து முறையிட்டுள்ளோம். தி.மு.கவின் வெற்றியை எப்பாடுப்பட்டாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதில் அ.தி.மு.க உறுதியாக இருந்து அதற்கான அரங்கேற்றங்களை நிகழ்த்தி வருகிறது. இந்த விதிமீறல்களுக்கெல்லாம் தேர்தல் ஆணையமும் ஒத்துழைத்து வருகிறது.

வாக்கு பெட்டிகளை மறைத்து வைத்து திருடனே தன்னை திருடன் என சொல்லிக்கொள்ளாதவாறு நீதிமன்றத்தில் தி.மு.க மீது அ.தி.மு.க குற்றஞ்சாட்டியுள்ளது.” இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

banner

Related Stories

Related Stories