மு.க.ஸ்டாலின்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி : தங்கம் வென்ற தமிழக வீராங்கனை - மு.க. ஸ்டாலின் பாராட்டு !

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளுதூக்கும் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி : தங்கம் வென்ற தமிழக வீராங்கனை - மு.க. ஸ்டாலின் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நேபாளத்தில் இந்த ஆண்டிற்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதல் பிரிவில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கம் வென்று சாதித்துள்ளார்.

புதுக்கோட்டையை சேர்ந்த அனுராதா, 87 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டார். இவர் ஸ்நாட்ச் பிரிவில் 90 கிலோ எடையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ எடையும் சேர்த்து மொத்தம் 200 கிலோ தூக்கி முதலிடம் பிடித்தார். தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேபாளத்தில் நடைபெற்று வருகின்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளுதூக்கும் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் 87 கிலோ பிரிவு பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா அவர்களுக்கு வாழ்த்துகள்!

ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அவர், உலக அரங்கில் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கட்டும்!'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories