மு.க.ஸ்டாலின்

''எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கே இந்த நிலை என்றால் அப்பாவி மக்களின் நிலை?'' - மு.க.ஸ்டாலின் கேள்வி!

கோவையில் அரசு நிகழ்ச்சிக்கு சென்ற தி.மு.க. எம்.எல்.ஏவை தடுத்து நிறுத்தப்பட்டதற்கு தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

''எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கே இந்த நிலை என்றால் அப்பாவி மக்களின் நிலை?'' - மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநாகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக்குக்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை. தனது தொகுதியில் நடக்கும் அரசு விழாவுக்கு மக்கள் பிரதிநிதியான தன்னை எப்படி அழைக்காமல் இருக்கலாம் என்று கேள்வி கேட்க, குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

''எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கே இந்த நிலை என்றால் அப்பாவி மக்களின் நிலை?'' - மு.க.ஸ்டாலின் கேள்வி!

அப்போது அவரை காவல்துறையினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு முன்பாகவே கார்த்திக் எம்.எல்.ஏ-வை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் காவல்துறையினர் மற்றும் அ.தி.மு.க-வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ தடுத்து நிறுத்தப்பட்டதற்கு தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”வேலூரில் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமாரை ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற கார்த்திக் எம்.எல்.ஏ-வும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு தி.மு.க தக்க பாடம் கற்பிக்கும்!'' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories