மு.க.ஸ்டாலின்

“அ.தி.மு.க அரசின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான்” - தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க. பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க அரசை சாடி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய எழுச்சி உரையின் தொகுப்பு.

“அ.தி.மு.க அரசின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான்” - தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எடப்பாடி தலைமையில் 30 அமைச்சர்களும் கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்றும், கோட்டை கொள்ளையர்களின் கூடாரமாகவிட்டது என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தி.மு.க. பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டங்கள் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு வீரவாளை பரிசாக அளித்தார் தருமபுரி மாவட்டச் செயலாளர்.

பொதுக்கூட்டத்தில் எழுச்சி உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நாட்டில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவர்கள் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பெருமிதமாக தெரிவித்தார்.

“அ.தி.மு.க அரசின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான்” - தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தி.மு.கவின் வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், கேபிள் கனெக்‌ஷன்களை வைத்து ஊடகங்களை ஆட்சியாளர்கள் மிரட்டுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். அ.தி.மு.க பேனரால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் இரங்கல் கூட தெரிவிக்காதவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும், அ.தி.மு.க கொடிக்கம்பத்தால் இடதுகாலை இழந்த போதும், அது பற்றி தெரியாது எனக் கூறியவர் எனவும் மு.க.ஸ்டாலின் விமர்ச்சித்தார்.

நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டத்தால் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அவமானம். நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதுபற்றியெல்லாம் அ.தி.மு.க அரசுக்கு அக்கறையில்லை என தி.மு.க. தலைவர் குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழகத்தில் தற்போதுள்ள அரசு 100க்கு 100 தோற்றுப்போன அரசு என்றும், அ.தி.மு.க அரசு கோமா நிலையில் உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

“அ.தி.மு.க அரசின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான்” - தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

குடிமராமத்து பணிகள், எல்.இ.டி. பல்புகள், குப்பைகள் என அ.தி.மு.க அரசின் ஊழல் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். அ.தி.மு.க ஆட்சியாளர்கள் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், கமிஷன் கேட்டதால் மத்திய அரசின் 5 ஆயிரம் கோடி நிதி திரும்பி போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் பிரச்னைகளுக்காக பலமுறை தான் சிறை சென்றுள்ளதாகவும், தியாகம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் என்னை பற்றி விமர்சிப்பதற்கு தகுதியற்றவர்கள் என அ.தி.மு.கவினரை சாடிய தி.மு.க. தலைவர், மிசாவில் மு.க.ஸ்டாலின் சிறைக்கு சென்றாரா என கேள்வி கேட்பவர்கள் கேடுகெட்ட ஜென்மங்கள் என காட்டமாக பேசினார்.

“அ.தி.மு.க அரசின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான்” - தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை அ.தி.மு.க அரசு எதிர்க்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்போம் என எடப்பாடி அரசு பொய் கூறி வருகிறது என்றார். பா.ஜ.க அரசின் தவறான பொருளாதார கொள்கையால், 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

banner

Related Stories

Related Stories