மு.க.ஸ்டாலின்

எழுத்தாளர் கி.ராவின் மனைவி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தா:அர் கி.ராஜநாராயணனின் மனைவி கணவதி அம்மாள் மறைந்ததற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கி.ராவின் மனைவி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் துணைவியார் கணவதி அம்மாள் மறைவையொட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “கரிசல் மண்ணின் மகத்தான எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் துணைவியார் திருமதி. கணவதி அம்மாள் மறைவுற்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

எழுத்தாளர் கி.ராவின் மனைவி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கி.ரா.அவர்களின் சொந்த ஊரான இடைச்செவல் தொடங்கி அவர் பணியாற்றிய புதுச்சேரி வரை, தமது வாழ்க்கைப் பயணத்தில் எந்நாளும் துணை நின்ற தமது துணைவியார் மறைவினால் பேரிழப்பைச் சந்தித்துள்ளார்கள்.

கி.ரா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories