பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் மனைவி கணவதி அம்மாள். இவருக்கு வயது 87.
உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு காலமானார்.
அன்னாரது உடல் லாசுபேட்டையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான இலக்கிய ஆளுமைகள் அன்னாரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
97 வயதான எழுத்தாளர் கி.ராஜநாராயணனை பேணி காத்துவந்தவர் கணவதி அம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.