மு.க.ஸ்டாலின்

கலைஞரின் வாழ்க்கையே பெரும் போராட்டம் தான் - கலைஞர் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜெயலலிதா அம்மையார் மறைந்து இரண்டு ஆண்டுகளாகியும் அ.தி.மு.க.வினர் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கலைஞரின் வாழ்க்கையே பெரும் போராட்டம் தான் - கலைஞர் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முழு திருவுருவ சிலையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், கலைஞர் அவர்கள் மறைவிற்கு பிறகு முதல் முறையாக அண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைக்கப்பட்டது. அந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தனர். கலைஞரின் குரு மூலமாக விளங்கும் ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவதாக சிலை நிறுவப்பட்டது.

அதன் பிறகு அண்ணா பிறந்த மண்ணில் மூன்றாவதாக சிலை நிறுவப்பட்டது. வீரர்கள் நிறைந்த மாவட்டமான திருச்சி மாநகரில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் நான்காவதாக தொடர்ந்து சிலை நிறுவப்பட்டது. பின்னர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியில் முத்தமிழ் அறிஞரின் சிலை நிறுவப்பட்டது. அதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

கலைஞரின் வாழ்க்கையே பெரும் போராட்டம் தான் - கலைஞர் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

இன்று ஈரோட்டில் இரண்டாவது சிலையாக திராவிட கொள்கைகளை பறைசாற்றிய ஏ.டி. பன்னீர்செல்வம் பெயரில் உள்ள பூங்காவில் திறப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. கலைஞரின் வாழ்க்கையே பெரும் போராட்டம் தான்.

பள்ளிப் பருவத்திலேயே திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் அவரை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட போது, அந்தப் பள்ளிக்கு எதிரே உள்ள குளத்தில் பள்ளியில் சேர்க்காவிட்டால் நான் குதித்து விடுவேன் என போராடிய பிறகே பள்ளியில் அவரை சேர்த்தார்கள்.

பள்ளிக்கூடம் சேரும்பொழுது போராடி சேர்ந்தவர். அவர் திருமணத்தின் போது திருமணம் முடிந்த கையோடு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். மொழி போராட்டத்திற்காக டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றுவதற்காக ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து போராடிய பிறகே அதன் பெயர் மாற்றமடைந்தது.

கலைஞரின் வாழ்க்கையே பெரும் போராட்டம் தான் - கலைஞர் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

இதேபோல் தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது நெருக்கடி நிலை ஏற்பட்டு ஆட்சி கவிழும் நிலையில் டெல்லியில் இருந்த தூதுவர்கள் வந்து நெருக்கடி நிலையை எதிர்த்து பேசாதீர்கள் என தூது விட்டனர் அப்போதும் நெருக்கடி நிலையை எதிர்த்துப் பேசி நமக்கு ஆட்சி முக்கியமல்ல என எமெர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியை இழந்தவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

இரண்டாண்டு ஆகிறது தலைவர் நம்மை விட்டு பிரிந்து, ஆனால் இன்னும் அவர் சாதனைகளை சொல்லாமல் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா அம்மையார் மறைந்து இரண்டு ஆண்டுகளாகியும் அ.தி.மு.க.வினர் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை. இவர்கள் தங்கள் சட்டை பாக்கெட்டில் அந்த அம்மையாரின் புகைப்படத்தை வைத்து கொள்ளையடிக்கும் இந்த கூட்டம் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை.

கலைஞரின் வாழ்க்கையே பெரும் போராட்டம் தான் - கலைஞர் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகம் முழுவதும் உரிய அனுமதியோடு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறக்கப்படும். நீதிமன்றம் சென்று வாதாடும் முன் இந்த அரசு இந்த சிலையை அமைக்க அனுமதி கொடுத்ததே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள போட்டித் தேர்வு வெற்றி நூலகத்திற்கு 30000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினார்.பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த நூலகத்தை பார்வையிட்டார்.

banner

Related Stories

Related Stories