மு.க.ஸ்டாலின்

சுபஸ்ரீ மரணம்:குற்றவாளி ஆளும்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா-மு.க.ஸ்டாலின் கேள்வி!

குற்றவாளி ஆளும்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுபஸ்ரீ மரணம்:குற்றவாளி ஆளும்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா-மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த செப்டம்பர் 12ம் தேதி பள்ளிக்கரணை பகுதியில் அ.தி.மு.கவினரால் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். விபத்திற்கு காரணமான பேனர் அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் இல்ல நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் ஜெயகோபால் கைது செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளி ஆளும்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்.

காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் காவல்துறை காப்பாற்றுவது யாருக்காக'' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories