மு.க.ஸ்டாலின்

திமுகவினர் யாரும் பேனர், பிளக்ஸ், கட் அவுட் வைக்கக் கூடாது; மீறினால் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பேனர், பிளக்ஸ், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என திமுகவினருக்கு உத்தரவிட்டு மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுகவினர் யாரும் பேனர், பிளக்ஸ், கட் அவுட் வைக்கக் கூடாது; மீறினால் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.கவினர் யாரும் நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களுக்கு பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது,

அ.தி.மு.கவினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்.

திமுகவினர் யாரும் பேனர், பிளக்ஸ், கட் அவுட் வைக்கக் கூடாது; மீறினால் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும்.

ஆகவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவினர் யாரும் பேனர், பிளக்ஸ், கட் அவுட் வைக்கக் கூடாது; மீறினால் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தலைமைக் கழக, மாவட்டக் கழக, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories