மு.க.ஸ்டாலின்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை என அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதியில்லை என அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் :மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கக்கோரி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். அது மட்டுமல்லாமல் தமிழகம் பாலைவனமாகும் எனவும் பேசியுள்ளார்.

ஏற்கெனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்கள் பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றார் மு.க.ஸ்டாலின்.

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories