மு.க.ஸ்டாலின்

மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம் - மு.க.ஸ்டாலின் சூளுரை !

மக்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு பெரும் ஆதரவு கொடுத்ததற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மக்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம் - மு.க.ஸ்டாலின் சூளுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

17ம் மக்களவைத் தேர்தலின் முடிவுகள் தற்போது நாடு முழுவதும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பல இடங்களில் தி.மு.க வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க தலைவர் ட்விட்டரில் பதிவு இட்டுள்ளார் . அந்தப் பதிவில்,

“தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இன்னொரு பதிவில், “தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும், ஜனநாயகம் மற்றும் அனைத்து சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற அரசாங்கத்தை மோடி நடத்துவார்” என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories