மு.க.ஸ்டாலின்

தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார் - மு.க.ஸ்டாலின் பரப்புரை !

தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார் - மு.க.ஸ்டாலின் பரப்புரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திமுக தலைவர் முக ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து விரகனூரில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமராவதற்கு முன்பு பொய் சொன்ன மோடி பிரதமரான பிறகும் பொய் கூறிக்கொண்டிருக்கிறார். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி அளித்த வாக்குறுதியும் பொய், ஒவ்வொருவரது வாங்கிக் கணக்கிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தலா ரூ.15 லட்சம் போடுவோம் என கூறியதும் பொய் தான். பொய் பேசுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது.

1987-ல் டிஜிட்டல் கேமராவில் அத்வானியை புகைப்படம் எடுத்து இமெயில் அனுப்பியதாக மோடி கூறியிருக்கிறார். 1990-ல் தான் டிஜிட்டல் கேமராவே உலகத்தில் புழக்கத்துக்கு வந்தது என்பதால் மோடி கூறியது அப்பட்டமான பொய் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார். எடப்பாடி ஆட்சிக்கு முடிவுகட்ட திமுக வேட்பாளர் சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

banner

Related Stories

Related Stories