மு.க.ஸ்டாலின்

அரவக்குறிச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

மே 19ம் தேதி அன்று நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்காக தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அரவக்குறிச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர பிரசாரத்தை தொடங்கினார்.

கழக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் இன்று காலை நடைபயணமாகச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

இதேபோன்று, இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் சந்தை பகுதிக்குச் சென்ற தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏராளமானோர் கை குலுக்கியும், செல்ஃபி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

நடைபயணத்தின் போது, அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தளபதி ஸ்டாலினிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் எடுத்துரைத்தனர். பின்னர், மக்களோடு அமர்ந்து, பழச்சாறையும் பருகினார்.

மேலும், ரமலான் நோன்பு தொடங்கியுள்ளதை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.

இதனையடுத்து திண்ணைப்பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலினிடம் அ.தி.மு.க ஆட்சியில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து இஸ்லாமிய பெண்கள் எடுத்துரைத்தனர். அவர்களின் குறைகளை தலைவர் ஸ்டாலின் கனிவுடன் கேட்டறிந்தார்.

பின்னர், தி.மு.க. ஆட்சி அமைத்ததும் மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

banner

Related Stories

Related Stories