மு.க.ஸ்டாலின்

ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் !

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். 

ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

தூத்துக்குடியில் இருந்து கிளம்பிய அவர், ஒட்டபிடாரம் தொகுதிக்குட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க தலைவரை அப்பகுதி பெண்கள் வாஞ்சையோடு சூழ்ந்துகொண்டனர்.

அப்போது வானம் பார்த்த பூமியான இங்கு குடிநீருக்காக 2 கிலோமீட்டர் தூரம் நடப்பதாக நாள்தோறும் நடப்பதாக வருத்தத்துடன் கூறினர். அதனை கேட்டுக்கொண்ட தி.மு.க தலைவர், கழக ஆட்சி வரும்போது, குடிநீர் பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படுத்தித்தரப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அங்குள்ள அருந்ததியர் காலனிக்கு நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த தி.மு.க தலைவர், பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை கனிவுடன் கேட்டுக் கொண்டார்.

ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் !

இதையடுத்து கீழத்தட்டப்பாறை கிராமத்திற்குச் சென்ற தி.மு.க தலைவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். கிராமம் முழுவதும் சுற்றிவந்த தி.மு.க தலைவரிடம், தங்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய பிரச்சனைகளை எடுத்துக்கூறினர். நடைபயணத்தின் நடுவே, மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவரிடம் வாக்கு சேகரித்தார். அதன் பின்னர் தி.மு.க தலைவர் சூழ்ந்துகொண்ட தாய்மார்களும், இளம்பெண்களும், சிறுவர்களும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம், ‘உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்; அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்’ என்று நம்பிக்கை அளித்தார்.

ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் !

அங்கிருந்து புறப்பட்ட தி.மு.க தலைவர், மேல தட்டப்பாறை கிராமத்திற்கு வந்தடைந்தார். அங்கு திரளான மக்கள் அவரை வரவேற்றனர். வீடுவீடாக சென்ற தி.மு.க தலைவர், வேட்பாளர் சண்முகய்யாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்வுகளின்போது தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி, ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா. ராதாகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories