மு.க.ஸ்டாலின்

மதவாத சக்திகளை விரட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை 

சிவகங்கை மக்களவை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டமன்ற வேட்பாளர் இலக்கியதாசனை ஆதரித்து,சிவகங்கையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

மதவாத சக்திகளை விரட்ட வேண்டும் -  மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை 
M.K.Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் இலக்கியதாசனை ஆதரித்து,சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.அதில்,

இந்தியாவிலேயே கேவலமான, அசிங்கமான, கடைந்தெடுத்த அரசியல்வாதி யார் என்று பார்த்தால் அது ஹெச்.ராஜா தான்.தமிழ் சமூகத்தின் நிம்மதியைக் கெடுப்பது, பொய்களை மட்டுமே பேசுவது, கலவரத்தைத் தூண்டுவது இது மட்டும் தான் ஹெச்.ராஜாவின் வேலை. ஹெச்.ராஜாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் அதைவிட அவமானம் சிவகங்கை மக்களுக்கு வேறேதும் இல்லை.தந்தை பெரியாரின் சிலையை உடைக்க உடைக்க நினைத்த ஹெச்.ராஜாவிற்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.புகட்ட நீங்கள் தயாரா ?

இந்திய பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டது என்று பா.ஜ .க வினர் பிரசாரம் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடிக்கும் ,நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் என்னவென்று தெரியாது என்று பா.ஜ.கவை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்

இந்தியாவின் முதுகெலும்பாய் திகழும் விவசாயிகளுக்கு மோடி என்ன செய்தார்.மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில்,இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன் தொகையான 60000 கோடி ருபாயை தள்ளுபடி செய்தது. விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்னன் தவறான தகவலை சொல்லி வருகிறார்.காங்கிரஸ் ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி

செய்ய வழிவகை செய்ய பட்டுள்ளது.இதுவே மோடியிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்டால் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கும்.இனிமேல் பாரதிய ஜனதா கட்சியை கார்ப்பரேட் ஜனதா கட்சி என்று தான் இனி அழைக்க வேண்டும்,சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பி.ஜே.பி அல்ல சி.ஜே.பி.

மத்தியில் மோடி சர்வாதிகாரியை போல் ஆட்சி நடத்தி வருகிறார்.மாநிலத்தில் உதவாக்கரை ஆட்சி நடைப்பெற்று வருகிருது.மக்களை பற்றி எடப்பாடி கவலைப்படுவதே கிடையாது.ஓசூர்,தருமபுரி,கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் கெட்ட ரத்தம் செலுத்தப்பட்ட 15 கர்ப்பிணி பெண்கள் இறந்துள்ளனர்.இந்த துறை அமைச்சர் விஜய பாஸ்கரரோ ஹெச்.ராஜாவை வெற்றி பெற வைப்பேன் என முதல்வரிடத்தில் சபதம் செய்து வந்துள்ளார்.அவர் துறையில் நடக்கும் தவறுகளை தடுக்க சபதம் எடுத்தாரா.

வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களின் பேரில் வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.15 லட்சம் போடுவேன் என கூறினார். யாருக்கேனும் போட்டுள்ளாரா? அப்படி போட்டிருந்தால் சொல்லுங்கள் நான் மன்னிப்பு கேட்கிறேன்.பிரதமர் மோடி வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குவார். ஆனால் செயல் ஒன்றும் இருக்காது. பாஜகவிற்கு எதிராக யாரும் பேசினால் தேச துரோகி என கூறுகிறார்களே ,இது முறையா? 5 ஆண்டுகளுக்கு முன் மதச்சார்பற்ற இந்தியா உருவாகும் என கூறினார்களே, அப்படி செய்தார்களா? நாற்காலி தான் இவர்களது நோக்கம்.

மதவாத சக்திகளை ஓட ஓட விரட்ட வேண்டும் ,மத்தியில் உள்ள சர்வாதிகாரியையும் மாநிலத்தில் உள்ள உதவாக்கரையையும் விரட்ட சபதம் ஏற்றிட வேண்டும்.நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக ஆட்சியை அகற்றி இந்தியாவின் மானத்தை தமிழக மக்கள் காப்பாற்ற வேண்டும் என்றார்.

banner

Related Stories

Related Stories