
தேர்தல்களில் முறைகேடு செய்து பா.ஜ.க வெற்றி பெற்று வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வாக்கு திருட்டில் ஒன்றிய பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது என அண்மையில் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளியிட்டு இருந்தார்.
மேலும், பீகார் தேர்தலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் 50 லட்சத்திற்கும் மேலான வாக்காளர்கள் நீதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் எடும் எதிர்ப்புகள் தெரிவித்தன. திட்டமிட்டு வாக்காளர்களை ஒன்றிய அரசு நீக்கி சதி செய்து வருகிறது என குற்றம்சாட்டின.
அடுத்தடுத்து, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஹரியானாவில் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி லாரிசா ரோச்சா சில்வா என்பவரது பெயரில் ராய் சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளில் 22 இடங்களில் பெயர் உள்ளது என்பதை ஆதாரங்களுடன் நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
இதையடுத்து யார் அந்த பிரேசில் மாடல் என பலரும் தேடி அவரது இன்ஸ்டாகிராம் என்னை கண்டுபிடித்து, இந்திய வாக்காளரா? நீங்கள் என கேள்விகளை எழுப்பி குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், "இந்தியாவுக்கு நான் சென்றது கூட இல்லை. மக்களை ஏமாற்றுவதற்கான எனது புகைப்படத்தை எனது ஒப்புதல் இல்லாமலே பயன்படுத்தி இருக்கிறார்கள். இது என்ன முட்டாள்தனம்.
அது நான் அல்ல. அது என்னுடைய புகைப்படம் மட்டுமே. இதற்கிடையில் சில இந்திய செய்தியாளர்கள் என்னை தொடர்பு கொண்டு இது குறித்து பேட்டி கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு நான் ஒரு சாதாரண பெண் என கூறிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
பிரேசில் மாடல் ஒருவர் இந்திய தேர்தல் ஆணையத்தை கிண்டல் அடிக்கும் அளவிற்கு, ஒன்றிய பா.ஜ.க அரசின் செயல்பாடு உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.






