
மகாராஷ்டிரா மாநிலம், பத்ராட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷல். இவரது நண்பர் பிரசாந்த். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று, பார்தி ரயில்வே கேட் பகுதிக்கு சென்றனர்.
அப்போது, நண்பர்கள் தங்களது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர். மேலும் ஹெட்போனை மாட்டிக் கொண்டு இருந்துள்ளனர்.
அந்நேரம் இந்த வழியாக, அகமதாபாத் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துள்ளது. தண்டவாளத்தில் இளைஞர்கள் இருப்பதை பார்த்து, ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்த முயன்றுள்ளார்.
இருப்பினும், இருவர் மீதும் ரயில் மோதியுள்ளது. இதில் நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






