இந்தியா

ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் 2016 ஆம் ஆண்டு வருமானவரி துறை சோதனை நடத்தி ரூ.5 கோடியை கைப்பற்றியது. பின்னர் வரி ஏய்ப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பந்தபட்ட நபர் வருமானவரி தீர்பாயத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் அபராதம் இல்லாமல் வருமான வரியை செலுத்த உத்தரவிட்டது. ஆனால், அவர் மீதான வழக்கை வருமான வரித்துறை கைவிடாமல் தொடர்ந்து நடத்தியது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்துசெய்ய மறுத்தது.

இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமானவரித்துறை தனது சொந்த விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டுள்ளது. இது தவறான நடவடிக்கை என்று குறிப்பிட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

அதோடு, இது வருமானவரி துறையின் முக்கியமான குறைபாடு, நியாமான விசாரணைக்கு எதிரானது, வருமான வரித்துறையின் பொறுப்புகளுக்கு எதிரானது. இதனை எந்தவகையிலும் நியாபடுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது, வருமானவரி துறைக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories