இந்தியா

”எங்கள் பேரணியை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது” : RJD தலைவர் தேஜஸ்வி பேட்டி!

வாக்காளர் அதிகார யாத்திரையை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது என RJD தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

”எங்கள் பேரணியை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது” : RJD தலைவர் தேஜஸ்வி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை மறு சீரமைப்பதற்காக எஸ்.ஐ.ஆர் எனும், Special intensive revision எனும் நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தியது. இதனால் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை பல்வேறு காரணங்கள் சொல்லி இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த அவசர நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து வாக்கு திருட்டை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்குரிமை பயணத்தை ஆகஸ்ட் 17 ஆம் தேதியில் இருந்து மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தியுடன் கைகோர்த்து வருகிறார்கள்.

ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடந்த பேரணியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது கூடியிருந்த பீகார் பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று நடைபெற்று வரும் பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் பங்கேற்று இருக்கிறார். ராகுல் காந்தி, தேஜஸ்வியுடன் இணைந்து திறந்த வாகனத்தில் பேரணியாக அகிலேஷ் சென்றார். இந்நிலையில், வாக்காளர் அதிகார யாத்திரையை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, வாக்காளர் அதிகார யாத்திரையை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது. இந்த வரலாற்று யாத்திரையால் NDA கூட்டணி மிகவும் பதட்டமாகிவிட்டது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள். நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் மீண்டும் NDA கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வராது.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories