இந்தியா

”குஜராத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கும் வாக்குத் திருட்டு” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!

வாக்குத் திருட்டை குஜராத்திலிருந்துதான் பாஜக ஆரம்பித்துள்ளது.

”குஜராத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கும் வாக்குத் திருட்டு” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாக்குத்திருட்டைக் கண்டித்து பீகார் பாட்னாவில் நடைபெற்று வரும் பேரணியில் நேற்று (27.8.2025) உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், வாக்குத் திருத்தத்திற்காக பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறது என்றும், எங்களுக்கு ஆதரவளிக்க இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வந்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியது வருமாறு:–

இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கானோர் தேர்வு. ஆனால் அது குறித்து யாரும் செய்தியில் கூறுவதில்லை.

அரசியல் சாசன புத்தகம் புனித நூல் ஆகும். இந்த சாசனத்தின்படிதான் வாக்குரிமை அனைவருக்கும் கிடைத்தது. இந்த அரசியல் சாசனத்தில் ஏராளமான சிந்தனைகள் உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் இங்கு நம்மிடையே வந்துள்ளார்.

தந்தை பெரியாரின் சிந்தனை இதில் உள்ளது நம்மிடையே வேணுகோபால் உள்ளார். நாம் பெரிதும் மதித்திடும் நாராயண குருஜி, அம்பேத்கர், புலே, காந்திஜி, புத்தர் உள்ளிட்டோரின் சிந்தனைகள் நிறைந்துள்ளன.

நரேந்திர மோடி வாக்குகளைத் திருடி தேர்தலில் வெற்றி பெறுகிறேன் என்பதை நான் முழு உத்தரவாதத்துடன் சொல்வேன். நரேந்திர மோடி வாக்குகளைத் திருடுவதற்கு தேர்தல் ஆணையம் உதவி செய்கிறது. இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் மற்றும் முன்னணி நெறியாளர்களில் யாரேனும் தாழ்த்தப்பட்ட, ஒபிசி பிரிவை சேர்ந்தவர்கள் உள்ளரா?

ஊடகங்களில் உள்ளவர்களும் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். இந்த யாத்திரையில் பல்லாயிரக்கணக்கானோர் தேர்வு. ஆனால் அது குறித்து யாரும் செய்தியில் கூறுவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் போரின்போது அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் 24 மணி நேரத்திற்குள் தாக்குதலை நிறுத்திவிடுமாறு கேட்டுள்ளார் ஆனால் பிரதமர் மோடி 5 மணி நேரம் நேரத்திலேயே போரை நிறுத்தி விட்டார்.

இந்த செய்தியெல்லாம் மீடியாக்களில் வராது. ஏனென்றால் மோடி, அதானி, அம்பானி அதன் உரிமையாளர்களாக உள்ளனர் எனது தரப்பிலோ, ஸ்டாலின் தரப்பிலோ, தேஜஸ்வி தரப்பிலோ ஊடகங்கள் இல்லை வாக்குத் திருட்டு என்பது, தாழ்த்தப்பட்ட, ஓபிசி, சிறுபான்மை யினர் மற்றும் இந்தியாவின் ஏழை எளிய மக்களுக்கு எதிரான தாக்குதல் வாக்குகள் பறிபோன பிறகு ரேஷன் கார்டும், நிலமும் பறிபோகும் இதன் மூலம், அவமதிப்பு, வாய்ப்பு மறுப்பு, கல்வி மறுப்பு என சுதந்திரத்திற்கு முந்தைய காலம் திரும்பும்.

குஜராத்தில் சில பெயர் தெரியாத கட்சிகள் உள்ளன, அவற்றின் பெயர்களை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், அந்த கட்சிகள் ரூ. 4,300 கோடி மதிப்புள்ள நன்கொடைகளைப் பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் மிகக் குறைந்த தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளன. குறைவாகவே செலவிட்டுள்ளன. இந்த கோடிகள் எங்கிருந்து வந்தன? கட்சிகளை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது? தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? அல்லது இங்கும் பிரமாணப் பத்திரங்களைக் கேட்குமா? அல்லது இந்த முறையும் மறைக்கும் வகையில் சட்டத்தையே மாற்றுமா?"

வாக்குத் திருட்டை குஜராத்தி லிருந்துதான் பாஜக ஆரம்பித்துள்ளது. அமைச்சர் அமித்ஷா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், பாஜக இன்னும் 40-50 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்கும் என்று பேசினார். அப்போது, ​​நான் ஆச்சரியப்பட்டேன். பா.ஜ.க. வாக்குத் திருட்டில் ஈடுபடுவதால் அவர் அவ்வாறு சொல்லியிருக்கலாம்”.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

banner

Related Stories

Related Stories