இந்தியா

கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

தனது கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடியின் கல்வித்தகுதியில் பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் சந்தேகங்கள் எழுப்பி வருகின்றன. ஆனால் அவரது தரப்பில் முறையான எந்த ஒரு பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமரின் கல்வித்தகுதியை அறிய விண்ணப்பம் செய்யப்பட்டது.

எந்த கல்வி நிறுவனத்தில் பிரதமர் பட்டம் படித்தார், எப்போது அவருக்கு பட்டம் வழங்கப்பட்டது என்பது குறித்த கேள்விகளெல்லாம் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி ஒரு முதுகலை பட்டதாரி என்று பதிலளிக்கப்பட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் இளங்கலை பட்டமும், குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், தனது கல்வித்தகுதி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவாழ்க்கைக்கு வந்தபின்னர், பொது வெளியில் தனது கல்வித்தகுதியை சொல்வதில் பிரதமருக்கு என்ன தயக்கம், பிரச்சனை என்று அவர் வினவியுள்ளார்.

பட்டம் குறித்த தகவல் மற்றும் சான்றிதழ்களை வெளியிடாமல் ரகசியம் காப்பது ஏன் அன ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். தகவல் அறியும் சட்டம் மூலம் அனைத்தையும் அறிந்து விடுவார்கள் என்பதால்தான் அந்த சட்டத்தையே மோடி அரசு திருத்தியுள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories