அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தால் முடங்கியது. நாடாளுமன்றம். இரு அவைகளும் பிற்கல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. அமெ ரிக்கா வரி குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுப்புத் தெரிவித்தார். அதானிக்கு உதவிடஇந்திய பொருளாதாரத் தையே,அழித்துவிட்டனர் என மோடி, அமித்ஷா மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அமெரிக்கா வரி விதிப்பு,பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் நாடாளுமன்றம் நேற்று முடங்கியது. இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவைநேற்று கூடியதும் இந்தியா மீதானஅமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பு குறித்து விவாதம்நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இதேபோல், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கவேண்டும் என்றுமக்களவை தி.மு.க. குழு தலைவர் டி. ஆர்.பாலு வலியுறுத்தினார்.
ஆனால், விவாதம் நடத்த சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். அவையை சுமூகமாக நடத்தவேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும்இருப்பதாக எதிர்க்கட்சிகள்முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின்கோரிக்கையை ஏற்க மறுத்தசபாநாயகர் ஓம் பிர்லா, அவையை பிற்பகல் 2மணிவரை ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையிலும் இதே பிரச்சினை எதிரொலித்தது. அமெரிக்காவின் வரி விதிப்பு, தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்பான நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் 28 ஒத்திவைப்புதீர்மான நோட்டீஸ்கள் வழங்கப் பட்டன. வாக்காளர் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்ட மாநிலங்களவை திமுக தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்தார். எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானங்களை நிராகரித்ததுடன், அவையும் பிற்பாடு 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாகப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித்தலைவர்ராகுல்காந்தி, இந்தியாவின் தற்போதைய உண்மை நிலையை, அதிபர்ட்ரம்ப் கூறியதாகவும்,ஆனால் இந்திய பொருளாதார நிலை குறித்து பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவருக்கும் தெரியாது என்றும் கூறினார். அதானிக்கு உதவிடவே, இந்தியாவின் பொருளாதாரத்தை ஒன்றியபா.ஜ.க. அரசு ஒட்டுமொத்தமாக அழித்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.