இந்தியா

”விமான விபத்து அதிர்ச்சியளிக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

”விமான விபத்து அதிர்ச்சியளிக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI171 லண்டனுக்கு நண்பகல் நேரத்தில் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அப்போது, வானுயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்தது.விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் ரக விமானம் ஆகும். இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால், பல வீடுகளும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த விபத்தால் அப்பகுதி முழுவதுமே கரும்புகையாக காட்சியளிக்கிறது. மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 133 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானது அதிர்ச்சியளிக்கிறது.எனது எண்ணம் முழுவதும் விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினருடனே உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன்” என சமூகவலைதளத்தில் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த விமான விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories