இந்தியா

Operation Sindoor எதிரொலி : இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது குறி.. பாக். தாக்க முயன்ற 15 நகரங்கள் என்ன?

Operation Sindoor எதிரொலி : இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது குறி.. பாக். தாக்க முயன்ற 15 நகரங்கள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜம்மு - காஷ்மீரில் அமைந்திருக்கும் பஹல்காமிற்கு சுற்றுலா சென்றிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த ஏப்.22-ம் தேதி இராணுவ உடையில் இருந்த 4 பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயமடைந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கண்டனங்களும் வலுத்தது.

தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், வாஹா எல்லையை மூடவும் இந்திய அரசு உத்தரவிட்டது.

Operation Sindoor எதிரொலி : இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது குறி.. பாக். தாக்க முயன்ற 15 நகரங்கள் என்ன?

தொடர்ந்து சிந்து நதிநீரை இந்திய அரசு நிறுத்தி வைத்து பாகிஸ்தான் தலையில் பெரிய இடியை இறக்கியது. மேலும் அந்த நாட்டை சேர்ந்த Youtube, ஓடிடி தளங்களில் உள்ள பாகிஸ்தான் திரைப்படங்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இப்படியாக தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் மீது மறைமுக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், நேற்று 'ஆப்ரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் இன்று (மே 08) தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்திருந்தது.

இது குறித்து இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மே 07-08 இரவு, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள நகரங்களில் உள்ள ராணுவ மையங்களைக் குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முற்பட்டது. இருப்பினும், நமது வான் பாதுகாப்பு அமைப்பு (Counter UAS Grid and Air Defence systems) மூலம் அவை அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல் முயற்சியை முறியடிக்கும் வகையிலேயே டிரோன் மற்றும் ஏவுகணையின் உடைந்த பாகங்கள் பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Operation Sindoor எதிரொலி : இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது குறி.. பாக். தாக்க முயன்ற 15 நகரங்கள் என்ன?

இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த முயற்சியை இந்திய அரசு முறியடித்துள்ளது. இந்திய அரசின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்தியாவின் முக்கிய 15 நகரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

=> 15 நகரங்கள் எவை ?

* அவந்திபுரா,

* ஸ்ரீநகர்,

* ஜம்மு,

* பதான்கோட்,

* அமிர்தசரஸ்,

* கபுர்தலா (Kapurthala),

* ஜலந்தர்,

* லூதியானா,

* ஆதம்பூர்,

* பட்டிண்டா (Bhatinda),

* சண்டிகர்,

*நல்,

* பலோடி,

* உத்தராலி மற்றும்

* பூஜ்

banner

Related Stories

Related Stories