இந்தியா

அமித்ஷாவை ராஜினாமா செய்யச் சொல்ல தைரியம் இருக்கிறதா? : மோடிக்கு சித்தராமையா கேள்வி!

அமித்ஷாவை ராஜினாமா செய்யச் சொல்ல தைரியம் இருக்கிறதா? என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

அமித்ஷாவை ராஜினாமா செய்யச் சொல்ல தைரியம் இருக்கிறதா? : மோடிக்கு சித்தராமையா கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உட்பிரிவு என சொல்லப்படுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். கார்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா,”நாட்டில் இவ்வளவு பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராஜினாமா செய்ய சொல்ல பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா?. ஒன்றிய அரசின் உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதையே தீவிரவாத தாக்குதல் எடுத்து காட்டுகிறது” என விமர்சித்துள்ளார்.

அதேபோல் மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாசூதின் ஓவைசி ”காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில், அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். தாக்குதலுக்கு ஒன்றிய அரசு உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்" கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories