இந்தியா

உயிரிழந்த தந்தை : இறுதிச் சடங்கிற்கு மகன் கொடுத்த கொடூர யோசனை!

மத்திய பிரதேசத்தல் இறந்த தந்தையின் உடலை அடங்கும் செய்வதில் சகோதரர்களுக்கு ஏற்பட்ட தகராறில் மூத்த மகன் கொடுத்த யோசனை அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உயிரிழந்த தந்தை : இறுதிச் சடங்கிற்கு மகன் கொடுத்த கொடூர யோசனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், லிதோரடால் கிராமத்தைச் சேர்ந்தவர் தயானி சிங். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கிஷன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் தேஷ்ராஜ் வீட்டில்தான் தயானி சிங் வசித்து வந்தார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக தயானி சிங் உயிரிழந்தார். இதையடுத்து தந்தை இறப்பை கேட்டு, இறுதி நிகழ்ச்சியில் பங்கேற் சகோதரன் வீட்டிற்கு கிஷன் வந்துள்ளார்.

அப்போது, "மூத்த மகன் நான்தான் தந்தையின் இறுதி சடங்குகளை நான்தான் செய்வேன்" என கூறியுள்ளார். இளைய மகனும் இதையே கூறியுள்ளார். இதனால் சகோதரர்கள் இறுவருக்கம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் யார் சொல்லியும் இருவரும் கேட்கவில்லை.

பிறகு மூத்தமகன், தந்தையின் உடலை இரண்டு துண்டாக வெட்டி ஒரு பகுதியை எனக்கும் மற்றொரு பகுதியை இளையவனுக்கும் கொடுக்கும்போடி யோசனை கூறியுள்ளார். இதைகேட்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த போலிஸார் சகோதரர்களை சமாதானப்படுத்தினர். பிறகு இளைய மகன் தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தார்.

banner

Related Stories

Related Stories