இந்தியா

திருடப்பட்ட ஆக்சிஜன் குழாய்கள்: மூச்சு விட முடியாமல் உயிரிழந்த குழந்தைகள்: ம.பி மருத்துவமனையில் கொடூரம் !

ஆக்சிஜன் குழாய்கள் திருடப்பட்டதால் மூச்சு விட முடியாமல் மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடப்பட்ட ஆக்சிஜன் குழாய்கள்: மூச்சு விட முடியாமல் உயிரிழந்த குழந்தைகள்: ம.பி மருத்துவமனையில் கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் என்ற நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் புதியதாக பிறந்த சில குழந்தைகளுக்கு சுவாசத்துக்காக ஆக்சிஜன் குழாய் பொருத்தப்பட்டிருந்தது.

இந்த பைப் லைன் குழாய் தாமிரத்தால் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நோட்டமிட்ட சில திருடர்கள், மருத்துமனையில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் செல்லும் அந்த தாமிரத்திலான பைப் லைனை திருடிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட ஆக்சிஜன் குழாய்கள்: மூச்சு விட முடியாமல் உயிரிழந்த குழந்தைகள்: ம.பி மருத்துவமனையில் கொடூரம் !

இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டுள்ளது. ஆனால் நீண்ட நேரம் இதனை அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் கவனிக்காத நிலையில், 12 குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் அவர் உடல்நிலை மோசமடிந்துள்ளது.

அதன்பின்னரே இதை கண்டறிந்த மருத்துவர்கள் அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் இந்த சிகிச்சை பலனளிக்காமல் அந்த குழந்தைகளில் ஏராளமானோர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories