இந்தியா

காதலனுடன் தனிமைக்காக ஹோட்டலுக்கு சென்ற இளம்பெண்... சடலமாக திரும்பிய அவலம்... குஜராத்தில் நடந்தது என்ன?

ஹோட்டலில் காதலனுடன் உடலுறவு கொண்ட இளம்பெண், அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுடன் தனிமைக்காக ஹோட்டலுக்கு சென்ற இளம்பெண்... சடலமாக திரும்பிய அவலம்... குஜராத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குஜராத்தில் அமைந்துள்ள நவ்சரி என்ற பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். நர்சிங் முடித்துள்ள இந்த பெண், அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த சூழலில் இருவரும் தனிமையில் இருக்க வேண்டும் என்று கடந்த செப்.23-ம் தேதி தனியார் ஹோட்டலுக்கு சென்று அறை எடுத்துள்ளனர்.

அங்கே இருவரும் உடலுறவு வைத்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு அவரது பிறப்புறுப்பில் இருந்து அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட காதலனும் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளார். மேலும் அந்த இரத்தப் போக்கை சரி செய்வதற்கு ஒரு துணியை எடுத்து அவரது பிறப்புறுப்பில் வைத்து அடைக்க முயன்றுள்ளார்.

காதலனுடன் தனிமைக்காக ஹோட்டலுக்கு சென்ற இளம்பெண்... சடலமாக திரும்பிய அவலம்... குஜராத்தில் நடந்தது என்ன?

இப்படியாக அந்த பெண்ணுக்கு இரத்தப் போக்கு அதிகமானதால் அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, யூடியூப்பில் இரத்தப் போக்கை சரி செய்வது குறித்து வீடியோ தேடியுள்ளார். சுமார் 2 மணி நேரம் அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்காமல் அந்த இளைஞர் யூடியூப்பில் வீடியோ தேடுவதிலேயே நேரத்தை செலவிட்டுள்ளார்.

இதையடுத்து வேறு வழியின்று, தனது நண்பனுக்கு ஃபோன் செய்து அழைத்த அந்த இளைஞர் அவர் வரும் வரை காத்துக்கொண்டிருந்தார். இதனிடையே அந்த பெண் சோர்வடைந்து மயக்க நிலைக்கு சென்றார். பின்னர் அந்த இளைஞரின் நண்பர் வந்ததும், ஹோட்டல் அறையில் இருந்த இரத்தக் கறைகளை சுத்தம் செய்துவிட்டு, அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு தங்கள் வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காதலனுடன் தனிமைக்காக ஹோட்டலுக்கு சென்ற இளம்பெண்... சடலமாக திரும்பிய அவலம்... குஜராத்தில் நடந்தது என்ன?

அங்கே இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரித்தனர். அப்போது இந்த விவரம் தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண் அதிகளவு இரத்தப் போக்கு காரணமாகவே உயிரிழந்ததாகவும், அவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் அவர் இறந்திருக்க நேராது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இளம்பெண்ணுக்கு அதிகளவு இரத்தப் போக்கு ஏற்பட்ட பிறகு மருத்துவ உதவியை நாடாமல், யூடியூப்பில் வீடியோ தேடிய இளைஞரின் அலட்சியத்தால், அந்த பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories